அடக்குவது ஆபத்து? தயக்கம் தவிர்ப்போம்!

ரியான நேரத்துக்கு சாப்பிடாமல் ஒத்திவைப்பது, தூங்காமல் இருப்பது பற்றி பார்த்திருக்கிறோம். ஏன்? இதற்கு ஓர் உதாரணமாக நாமே இருக்கிறோம். சிறுநீர் கழித்தலை ஒத்திப்போடுகிறவர்களைப் பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா? இன்றைக்கு நகர்ப்புறங்களில் பொது கழிப்பறைகளே இல்லை. அப்படியே இருந்தாலும் அதன் சுகாதார சீர்கேடு காரணமாக உள்ளே நுழையக் கூட முடியாத நிலை, வேலைப்பளு உள்ளிட்ட காரணங்களால் பலரும் சிறுநீர் கழிப்பதை முடிந்தவரை தள்ளிப்போடுகின்றனர்.

வயிறு முட்டி, சிறுநீர் கழித்தே தீர வேண்டும் என்று கால்கள் கோணும் நிலை ஏற்படும் வரை இவர்கள் சிறுநீர் கழிப்பதைப் பற்றி யோசிப்பதே இல்லை. சிறுநீர் கழிப்பதை எல்லாம் ஒரு பொருட்டாக நினைப்பதும் கிடையாது. அப்படியே இடம்பிடித்தாலும் எல்லா வேலையும் முடிந்தபிறகு செய்ய வேண்டிய கடைசி வேலையாகத்தான் இருக்கிறது. உண்மையில், இது மிகவும் ஆபத்தான பழக்கம் என்று தெரியாமல் இருக்கின்றனர்.

அடிவயிற்றில் சிறுநீர்ப்பை உள்ளது. இது  ரப்பர் பந்துபோல சுருங்கி விரியும் தன்மை கொண்டது. சிறுநீரகத்திலிருந்து `யூரேட்டர்’ எனும் மெல்லிய குழாய் (Ureter) வழியாக சிறுநீர், சிறுநீர்ப் பையை அடைகிறது. `யூரித்ரா’ (Urethra) எனும் குழாய் வழியாக சிறுநீர் வெளியேறும். சிறுநீர் கழித்தவுடன், சிறுநீர்ப்பை சுருங்கி மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பிவிடும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்