மூட்டுவலிக்கு தீர்வு... ஆர்த்தோகைன் தெரப்பி!

ல காலங்களாக, விளையாட்டு வீரர்கள் தங்களுக்கு ஏற்படும் மூட்டு வலியைப் பொருட்படுத்தாமல் விளையாடி வந்தனர். வலியை எதிர்கொள்ள வலி நிவாரணிகள், வீக்கத்தைத் தடுக்கும் மாத்திரைகள், ஐஸ் கட்டிகளை வைத்து ஒத்தடம் கொடுப்பது, மிகத்தீவிர பாதிப்பு என்றால் அறுவைசிகிச்சை செய்வது என்று இருந்தனர். இந்தநிலையைப் போக்க, மூட்டுப் பகுதிகளில் ஏற்படக்கூடிய பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே சரி செய்யும் ‘ஆர்த்தோகைன் தெரப்பி’ (Orthokine Therapy) எனும் சிகிச்சை சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டில் அறிமுகமானது. விளையாட்டு வீரர்கள் மட்டுமே பயன்படுத்திய, அதிக பிரபலமாகாத அந்த சிகிச்சை முறை, கொஞ்சம் கொஞ்சமாக பொது மக்கள் பெறும் சிகிச்சையாக மாறிக்கொண்டுவருகிறது. தற்போதுதான் அது நம் ஊருக்கும் வந்திருக்கிறது.

எலும்பு குறிப்பிட்ட வயது வரை நன்கு வளர்ச்சியடையும். அதன்பிறகு, வளர்ச்சி குறைந்து, தேய்மானம் ஏற்படத் தொடங்குகிறது. இது தவிர, விளையாட்டுகள், காயங்கள், முறையான ஸ்ட்ரெச்சிங் பயிற்சி செய்யாமல் உடற்பயிற்சி செய்வது போன்ற காரணங்களால் மூட்டில் `கார்ட்டிலேஜ்’ எனும் குருத்தெலும்பு பாதிக்கப்படுகிறது. இந்த குருத்தெலும்புதான் மூட்டுக்களுக்கு இடையே மென்மையான மெத்தைபோல செயல்பட்டு, இரண்டு எலும்புகளும் தேயாமல் பாதுகாக்கிறது. இவர்களுக்கு, மாத்திரை மருந்து அளிக்கப்படும். பாதிப்பு தீவிரமானால் மூட்டு மாற்று அறுவைசிகிச்சை மட்டுமே தீர்வு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்