எது நல்ல டூத் பேஸ்ட்? தேர்ந்தெடுக்க ஈஸி டிப்ஸ்

ன்றைய நவீன உலகில், டூத் பேஸ்ட் தவிர்க்க முடியாத அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாகிவிட்டது. பற்களின் ஆரோக்கியத்தைக் காக்க இரண்டு, மூன்று முறை பல் துலக்குபவர்களுக்குக்கூட பேஸ்ட் பற்றிய தெளிவு இருப்பதில்லை. சென்சிடிவ் பற்களுக்கு, பற்சிதைவைத் தடுப்பது, புத்துணர்வு அளிப்பது, வாய் துர்நாற்றத்தை நீக்குபவை, ஈறுகளை வலிமையாக்குபவை என விதவிதமான பேஸ்ட்டுகள் கிடைக்கின்றன. 

ஒரு காலத்தில் உப்பு, கரி தவிர்க்க வேண்டும் என்று விளம்பரம் செய்த நிறுவனங்கள் கூட, ‘எங்கள் பேஸ்டில் உப்பு, கரி இருக்கிறது’ என்று கூறி விற்பனை செய்கின்றன. கடைக்கு டூத் பேஸ்ட் வாங்கச் சென்றால், அழகாக, வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் வண்ணமயமான பேக்குகளைப் பார்த்து எதை எடுப்பது, எதை விடுவது என்று குழம்பாதவர்களே இருக்க மாட்டார்கள்.

கவர்ச்சிகரமான விளம்பரங்கள், பற்பசையின் நிறம், சுவை, மணம், அழகான பேக்கிங் ஆகியவற்றைப் பார்த்து பற்பசை வாங்குவது நம் வழக்கமாகிவிட்டது. ஆனால், அதில் என்னென்ன மூலப்பொருட்கள் உள்ளன, அவை நம் பற்களுக்கு உகந்தவையா, என்னென்ன பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையெல்லாம் யாரும் கவனிப்பதில்லை.

மூலப்பொருட்கள்

பற்பசைகளில் வேம்பு, லவங்கம் போன்ற இயற்கைப் பொருட்களும், கூடவே நுரை ஏற்படுத்தவும், நறுமணத்துக்காவும், சுவைக்காகவும், நிறத்தை அளிக்கவும், நீண்ட காலம் கெடாமலிருக்கவும் எனப் பல்வேறு ரசாயனப் பொருட்களும் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, டூத் பேஸ்ட் வாங்கும்போது அதில் என்னென்ன மூலப்பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பதை படித்துப் பார்த்து வாங்க வேண்டும்.

பற்பசையில் நுரை ஏற்படுத்த, சோடியம் லாரியல் சல்பேட் சேர்க்கப்படுகிறது. பாக்டீரியா தாக்குதலிலிருந்து பாதுகாக்க ஸ்டேன்னஸ் ஃபுளோரைடு (Stannous Fluoride) சேர்க்கப்படுகிறது. ஈரப் பதத்துக்காகச் சார்பிட்டால் (Sorbitol), ஹுமெக்டன்ட் (Humectant) ஆகியவை சேர்க்கப்படுகின்றன. இனிப்புச் சுவைக்காக சோடியம் சாக்கரின் (Sodium saccharin) சேர்க்கப்படுகிறது. இதனுடன், உப்பு, `சலவை சோடா’ எனப்படும் சோடியம் பை கார்பனேட் (Sodium Bicarbonate), கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம், வைட்டமின் டி போன்றவையும் சேர்க்கப்படுகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்