விரல்கள் செய்யும் விந்தை!

சூன்ய முத்திரை

சூன்ய முத்திரை என்பது ஆகாயத்தைக் குறிக்கும். அதாவது, வெற்றிடத்தைக் குறிப்பது என்று அர்த்தம். இந்த ஏதுமற்ற வெற்றிடமே அனைத்துப் பொருட்களுக்கும் இருப்பிடத்தைத் தருகிறது. இந்த வெற்றிடங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் நமது உடலின் பல்வேறு நோய்களைக் கட்டுப்படுத்த முடியும்.

எப்படிச் செய்வது?


ஆகாயத்தைக் குறிக்கும் நடுவிரலை மடக்கி, உள்ளங்கை நடுப்பகுதியைத் தொட வேண்டும். கட்டை விரலால் நடு விரலை அழுத்தவும். மற்ற மூன்று விரல்கள் நீட்டி இருக்க வேண்டும்.

வெறும் வயிற்றோடு செய்யவேண்டிய முத்திரை இது. தரையில் சப்பணமிட்டு உட்கார்ந்தோ, நாற்காலியில், கால்களைத் தரையில் பதித்தோ, ஒரு நாளைக்கு மூன்று முறை செய்யலாம். ஒவ்வொரு முறையும் 10 நிமிடங்கள் செய்ய வேண்டும்.

உடல்நலத்தில் குறைபாடு இருப்பவர்கள் மட்டும் இதைச் செய்யலாம். ஆனால், அதிக நேரம் செய்யக் கூடாது. ஆரோக்கியமாக இருப்பவர்கள் செய்ய வேண்டாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்