உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 17

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

யக்கத்தில் இருப்பவரை உயிரோடு இருக்கிறாரா என்று உறுதிசெய்துகொள்ள, மூச்சு வருகிறதா என்று அவர் மூக்கில் கை வைத்துப் பார்ப்போம்; இதயத்துடிப்பு உள்ளதா என மார்பில் கை வைத்துப் பார்ப்போம்; சருமம் இயல்பான வெப்பநிலையில் உள்ளதா என்று அவர் உள்ளங்கால்களைத் தொட்டுப் பார்ப்போம். ஆனால், இவை எல்லாம் இருந்துவிட்டால் மட்டும் ஒருவர் உயிரோடு இருக்கிறார் என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்காவில் 13 வயதுச் சிறுமி மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டார். `வென்டி லேட்டர்’ எனப்படும் செயற்கை சுவாசக் கருவியை அகற்றி விட்டால் அவர் உயிரிழந்துவிடுவார் என்ற நிலை. வென்டிலேட்டரை அகற்றலாம் என்று மருத்துவர்கள் சொல்ல, அதற்கு சிறுமியின் பெற்றோர், “அவள் இதயம் இன்னும் துடித்துக்கொண்டுதான் இருக்கிறது. அவள் உயிரோடுதான் இருக்கிறாள். எனவே, வென்டிலேட்டரை அகற்றக்கூடாது” என நீதிமன்றம் சென்றனர். மூளைச்சாவு பற்றிய விவாதத்துக்கு இந்தச் சிறுமி காரணமானார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்