அலர்ஜியை அறிவோம் - 17

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
தன் ஒவ்வாமை

லர்ஜி நோய்களில் தனித்தன்மை வாய்ந்த ஒரு நோய் வகை இருக்கிறது. அதற்குப் பெயர் ‘தன் ஒவ்வாமை நோய்’ (Auto immune disorder). உடலில் உள்ள தற்காப்பு அமைப்பு, தன்னுள் உள்ள ஒரு பொருளை தனக்கு எதிரி எனத் தவறாகப் புரிந்துகொண்டு செயல்படுவதால் ஏற்படும் நோய் இது. இந்தப் பிரிவில் 80-க்கும் மேற்பட்ட நோய்கள் உள்ளன. அவற்றில் மிக முக்கியமானதும் நிறையப் பாதிப்புகளைத் தருவதுமான ‘ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ்’ (Rheumatoid arthritis) எனும் மூட்டுவீக்க நோய் குறித்து இப்போது பார்க்கலாம்.

ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ்

அலர்ஜியைத் தூண்டும் ஆன்டிஜென்கள் உடலின் வெளியில் இருந்து வந்து நோயை உண்டாக்கும் என்றுதான் இது வரை பார்த்திருக்கிறோம். அலர்ஜியைப் பொறுத்த வரை இதுதான் பொதுவான கருத்து. மாறாக, உடலின் இயல்பான திசுக்களே சில நேரங்களில் எதிரிகளாகப் பாவிக்கப்படுகின்றன. அப்போது, சில நோய்கள் நமக்கு ஏற்படுகின்றன. அதில் முதலாவது ‘ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ்’.

இது, ஒரே நாளில் ஏற்படும் நோய் அல்ல. கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, நோயாளிக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு நாட்பட்ட நோய். இது எந்த வயதிலும் வரலாம். என்றாலும், 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதாக, புள்ளிவிவரம் சொல்கிறது. அதிலும், ஆண்களைவிட பெண்களுக்குத்தான் இதன் பாதிப்பு அதிகம். பெரும்பாலும், பரம்பரையாகவே இது வருகிறது. புகைபிடிப்பவர்களையும் மது அருந்துபவர்களையும் ஹார்மோன் பிரச்னை உள்ளவர்களையும் விரைவில் இந்த நோய் தாக்கிவிடுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்