ஸ்வீட் எஸ்கேப் - 18

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சர்க்கரையை வெல்லலாம்

காதுகேளாமை பிரச்னை ஏற்படுவதை, கேட்கும் திறன் குறைவதை நாம் உணர்வது இல்லை. ஆரம்பக் கட்டத்தில், தங்களுக்கு அப்படி ஒரு பிரச்னை இருப்பதே பலருக்குத் தெரிவதில்லை. குறிப்பாக, சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் காதுகேளாமை பிரச்னை மற்றவற்றைவிட வேறானது. இவர்களுக்குக் காது, கொஞ்சம் கொஞ்சமாகத் கேட்கும் திறனை இழந்து, ஒரு கட்டத்தில் முற்றிலும் கேளாத தன்மையை அடைகிறது. கேட்கும் திறனை இழந்துவிட்டோம் என்ற நிலையை அவர்கள் உணரும்போது பிரச்னை முற்றிவிட்டது என்று அர்த்தம்.

என்ன சொன்னாலும், திரும்பத் திரும்ப, ‘ம்... என்ன சொன்னீங்க?’ என்று கேட்பவரா... ஒருவர் பேசும்போது தன்னையுமறியாமல் காதை அவர் பக்கம் திருப்பிக் கேட்பவரா... ஷாப்பிங் சென்டர், உணவகம் போன்ற சலசலப்புச் சத்தம் மிகுந்த இடங்களில் குடும்பத்தினர், நண்பர்களுடன் கலந்துரையாடும்போது, அவர்கள் சொல்வதைக் கேட்பதற்குச் சிரமப்படுபவரா... அப்படி என்றால், காதுகேளாமை பிரச்னைக்கு ஆளாகியுள்ளீர்கள் என்று அர்த்தம்.

காதுகேளாமைக்கும் சர்க்கரை நோய்க்கும் என்ன தொடர்பு?

நியூரோபதி காரணமாக கை, கால்களில் ஏற்படக்கூடிய பிரச்னையைப் பற்றி நமக்குத் தெரியும். உண்மையில் அது கை, காலில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை; காதிலும் பிரச்னையை உருவாக்குகிறது. ஆம், சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கவில்லையெனில், அது காதுகேளாமைக்கும் வழிவகுக்கும். பொதுவாக மற்றவரைவிட, சர்க்கரை நோயாளிக்குக் காது கேளாமைக்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம்.

தொடர்ந்து, ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லையெனில், அது சிறுநீரகம் மற்றும் கண்ணில் பாதிப்பை ஏற்படுத்துகிறதல்லவா, அதுபோல காதுக்குச் செல்லும் மிக சிறிய ரத்தக் குழாயின் சுவரையும் அது பாதிக்கிறது.   நம்முடைய காதுகள் மிகவும் சிக்கலான அமைப்பைக் கொண்டவை. அதன் செயல்பாட்டை அன்றாடம் நாம் சார்ந்தே இருக்கிறோம். இந்த நிலையில், சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்காதபோது, இந்த நுண்ணிய ரத்தக் குழாய்ச் சுவர்கள் பாதிப்படைகின்றன. மற்ற உறுப்புகளாவது புதிய ரத்தக் குழாயை உருவாக்கி அதைச் சரி செய்ய முயற்சிக்கும். அந்த வாய்ப்புக்கூட காதுக்குக் கிடையாது.

காதுக்குள் உள்ள ரத்தக் குழாய் பாதிப்படைந்தது என்றால், காதின் செயல்திறன் குறைய ஆரம்பிக்கும்; காது கேட்கும் திறன் மட்டும்தான் பறிபோகும்; வேறு எந்த பாதிப்பும் இல்லை என்று எண்ணிவிட வேண்டாம். நாம் நிலையாக நிற்பதற்கும் உட்காருவதற்குமான அமைப்பு காதில்தான் உள்ளது. இந்த நிலைத்தன்மை பாதிப்படைவதால், தடுமாற்றம் ஏற்பட்டு, கீழே விழுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்