சுதா ரகுநாதன் ஹெல்த் சீக்ரெட்ஸ்

அளவான டயட் தினசரி வொர்க்அவுட் அப்பப்போ ஷாப்பிங்...

திரைத்துறையில் வலம்வரும் கர்னாடக இசைப்பாடகிகளில் முக்கியமானவர் சுதா ரகுநாதன். ‘வாரணம் ஆயிரம்’ திரைப்படத்தில் இவர் பாடிய ‘அனல் மேலே பனித்துளி’ பாடல்தான், இன்றும் பல ஜென்-Z இளைஞர்களின்  பிளேலிஸ்ட்டில் இருக்கும் ஃபேவரைட் பாடல். பரபரப்பாக வெளிநாடுகளில் கச்சேரி, அவ்வப்போது சினிமா பாடல் எனப் பல தளங்களில் இயங்கிக்கொண்டிருக்கும் சுதா ரகுநாதனின் ஹெல்த் மந்திரத்தை அறிய, அவரைச் சந்தித்துப் பேசினோம்.

“என்னைப் பொறுத்தவரை ஆரோக்கியம் என்பது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வது மட்டுமல்ல; அது மனதையும் சார்ந்திருக்கிறது” என, தன் கனிவான குரலில், அழுத்தம் திருத்தமாகக் கூறத் தொடங்கினார், சுதா ரகுநாதன்.

“காரம், புளிப்பு, குளிர்ச்சியான உணவுகளை முடிந்த அளவுக்குத் தவிர்த்துவிடுவேன். சிலவற்றை எல்லாம் எடுத்துக்கிறது இல்லை. எங்களைப் போன்ற பாடகிகளுக்குக் குரலும் உடலும் ரொம்ப முக்கியம். கர்னாடக சங்கீத கச்சேரிகளில் பாடும்போது, அடிவயிற்றிலிருந்து குரல் எடுத்துப் பாட வேண்டி இருக்கும். இதனால், நான் எப்போதும் அளவாகத்தான் சாப்பிடுவேன்!

சில வேளைகளில் அதிகமாகச் சாப்பிட்டுவிட்டால், வயிற்றில் இருக்கிற அமிலம்  நெஞ்சிலேயே நின்று எதுக்களிக்கும். அதனால், குரல் வளையில் புண் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். அது குரலுக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். அடிக்கடி வரும் ஏப்பம்  தொந்தரவு தரும். முக்கியமாக இரவு நேரக் கச்சேரியில் பாடமுடியாது போகும். அதனால என்ன சாப்பிடுறோம், எப்போ சாப்பிடுறோம், எவ்வளவு சாப்பிடுறோம் என்பதில் கவனமா இருப்பேன்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்