உணவு சொல்லும் அறிகுறிகள்!

வ்வொருவருக்கும் ஒவ்வொரு சுவை பிடிக்கும். சிலருக்குப் புளிப்பு, சிலருக்கு இனிப்பு, சிலருக்குக் காரம் என நாம் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு  உணவை நம்மையும் அறியாமல் விரும்பிச் சாப்பிடுவோம். உடலில் ஏதேனும் பாதிப்பு ஏற்படும்போது அதுபற்றிய முன்னெச்சரிக்கையை உடல் நமக்கு அறிவிக்கிறது. சுவை மூலமாக, உடல் தனது பிரச்னையை வெளிப்படுத்துகிறது. அதாவது  ஒருவர் அதிகமாக விரும்பிச் சாப்பிடும் உணவு வகைகளில் இருந்தே அவருக்கு உள்ள பாதிப்பையும் அறிய முடியும்.

கர்ப்பிணிகள் புளிப்புச் சுவையை அதிகம் நாடுவதைக் கவனித்திருப்போம். கர்ப்ப காலத்தில் ஏற்படும் அஜீரணம் காரணமாக, அடிக்கடி வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு, சத்துக்கள் வெளியேறிவிடும். குறிப்பாக, கல்லீரலுக்குப் போதிய சத்துக்கள் கிடைக்காது. இதனால்தான் அவர்களது நாக்கு புளிப்புச் சுவையைத் தேடுகிறது. இதை ‘ஃபுட் கார்விங்’ என்கிறார்கள். 

நமது உடலில் சோடியம் மற்றும் குளுக்கோஸ் குறைபாடு ஏற்படும்போது, ‘ஃபுட் கார்விங்’ ஏற்படும். சோடியம் குறைபாடு உள்ளவர்களுக்கு, உடலில் உப்பின் அளவு குறையும். இதனால், இயல்பாகவே உப்புச் சுவையை அவர்கள் அதிகம் விரும்புவார்கள். குளுக்கோஸ் குறைவாகக் காணப்படும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து, இனிப்புப் பண்டங்களை அதிகம் விரும்பிச் சாப்பிடுவார்கள். இதன்மூலமாக, பற்றாக்குறையான சத்துக்களை உடல் தானாகக் கேட்டுப் பெறுகிறது.

ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை தெரிவிக்க, மூளை வயிற்றுக்குக் கட்டளை இடுகிறது. இதனைச் செயல்படுத்தி, தேவையான சத்துக்களைப் பெறவே இந்த சுவைக்கான தேடல் தொடங்குகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்