கபாலம் காக்கும் டைட்டானியம் கவசம்

கரங்களில் சாலை விபத்துகள் பெருகிவிட்டன. நமது அன்றாட வாழ்க்கையும், நம்மைச் சார்ந்திருப்பவர்களின் எதிர்காலமும் தினம் தினம் கேள்விக்குள்ளாகிக்கொண்டு இருக்கிறது. விபத்துகளால் பலருக்குக் கை, கால் மற்றும் மூட்டு எலும்பு முறிவுச் சேதங்கள் ஏற்படுகின்றன. தலையில் அடிபட்டால், கபாலச் சிதைவு ஏற்படுகிறது.

வெளிநாட்டில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றிவந்த ராஜேஷ் சில மாதங்களுக்கு முன்பு, விடுமுறைக்காகச் சென்னை வந்திருந்தார். இவர் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி மோதியதால் தூக்கியெறியப்பட்டு, தலையில் பலமாக அடிபட்டது. இதனால் இவரது கபாலம் உடைந்தது. மண், தலைமுடி ஆகியவை உடைந்த மண்டை ஓட்டுக்குள் புகுந்து, மூளையை பாதித்தன. இதனால் மூளை வீங்கியது. நான்காம் நிலை கோமாவுக்குத் தள்ளப்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அடி பலமாக இருந்ததால், மூளையின் வீக்கம் அதிகரித்துக்கொண்டேபோனது. மருந்துகள் மூலம் மூளை வீக்கத்தைக் குறைத்து, ரத்தக் கசிவு நிறுத்தப்பட்டது. அதிர்ஷ்டவசமாக மூளையின் நியூரான்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை. எனவே, வீக்கம் கட்டுப்படுத்தப்பட்ட பின்பு  மூளையின் செயல்பாடு சராசரியாக இருந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில், 30 நாட்கள் கோமாவில் இருந்த இவர், பின்பு சுயநினைவுக்குத் திரும்பினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்