ஒரே நேரத்தில் நான்கு அறுவைசிகிச்சை

அசத்திய டாக்டர்கள்

சென்னை விமான நிலைய அதிகாரியாகப் பணியாற்றும் வெங்கடேசன் மயங்கிவிழுந்து சுயநினைவு இழக்கவே மருத்துவமனைக்குத் தூக்கிவந்தனர். அறிகுறிகள் பக்கவாதம்போல இருக்கவே உடனடியாக சிகிச்சை தொடங்கியது. பரிசோதனையின்போது, அவருடைய பெருந்தமனி கிழிந்திருப்பது தெரியவந்தது. மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாயில் ரத்தம் உறைந்து தடை ஏற்பட்டுத்தியதால், பக்கவாதம் போன்ற `பாரபிஸியா’ என்னும் நிலை ஏற்பட்டிருந்தது.

உடனடியாக அவருக்கு அறுவைசிகிச்சை மூலம் பெருந்தமனி கிழிவை சரி செய்ய வேண்டும், மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை சீராக்க வேண்டும், முதுகெலும்புக்கு செல்லும் ரத்தக் குழாயை சீராக்கி, தண்டுவட விரைப்பை சரி செய்ய வேண்டும் என மூன்று வகையான சிகிச்சைகள் அவருக்கு  செய்ய வேண்டிய நிலை. இதில் சிக்கல் என்னவென்றால், பெருந்தமனி கோளாறு காரணமாக மேலும் மூன்று பேருக்கு அன்று அறுவைசிகிச்சை திட்டமிடப்பட்டிருந்தது.  வெங்கடேசனுக்கும் அவசரமாக அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்ற நிலை.

இதயத்தில் உள்ள மிகப்பெரிய நாளம் (ஆர்ட்டரி) பெருந்தமனி. உடல் முழுவதுக்குமான நல்ல ரத்தம் இந்த நாளம் வழியாகத்தான் பாய்கிறது. இடது கீழ் அறை (வென்ட்ரிகிள்) பெருந்தமனியுடன் பொருந்தியுள்ளது. பெருந்தமனி சுவரில் கொழுப்பு படிவதால், ரத்த ஓட்டம் பாதிக்கிறது. இதைக் கவனிக்கவில்லை என்றால், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்குப் பெருந்தமனி பலவீனமாகி, கிழியத் தொடங்கும். ரத்தம் வெளியே கசியும்.

உடனடியாக அவருக்கு எண்டோவாஸ்குலர் சிகிச்சை முறையில், பெருந்தமனியில் இருந்து பிரிந்து காலுக்குச் செல்லும் ரத்தக் குழாய் வழியாக, செயற்கை சிந்தெடிக் பெருந்தமனி செலுத்தப்பட்டு, இடது வென்ட்ரிகிளுடன் நிரந்தரமாகப் பொருத்தப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்