வேம்பின் மகிமை

வேப்பமரத்தின் இலை, பூ, காய், பழம் மற்றும் மரப்பட்டை எல்லாமே மருத்துவ குணம் வாய்ந்தவை. தமிழர் வாழ்வில் கலாசார ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் இரண்டறக் கலந்தது வேப்பமரம்.

*வேப்பிலையை அரைத்துக் கட்டினால், ஆறாத ரணம், பழுத்து உடையாத கட்டி, வீக்கம் ஆகியவை குணமாகும்.

*வேப்பங்கொழுந்து ஒரு ஈர்க்கு, நான்கு  கடுக்காய்த் தோல் இரண்டையும் பிரண்டைச் சாறு விட்டு அரைத்து, அரை அவுன்ஸ் விளக்கெண்ணெய் கலந்து உள் மருந்தாக எடுத்துக்கொண்டால், குடல் பூச்சிகள் வெளியேறும். 

*வேப்பம் பூக்களைச் சேகரித்து உலர்த்தி, ஒரு வருடம் கழித்து இதைப் பயன்படுத்தி ரசம் வைப்பார்கள். இந்த வேப்பம் பூ ரசம், பித்த சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும்.

*வேப்பிலைக் கஷாயம் கிருமிகளை அழித்து காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். தினமும், காலை வேளையில் 10 வேப்பிலைக் கொழுந்தை ஐந்து மிளகுடன் சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால், மலேரியாக் காய்ச்சல் குணமாகும்.

*வேப்பிலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்துப் பூச, பித்த வெடிப்பு, கால் பாத எரிச்சல் மற்றும் நகச்சுத்தி குணமாகும்.

*வேப்பிலையை எலுமிச்சம் பழச் சாற்றில் அரைத்துத் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், தலைவலி, பித்த மயக்கம் குணமாகும்.

*சரும நோய் உள்ளவர்கள் வெந்நீரில் வேப்பிலை சேர்த்துக் கொதிக்கவைத்து குளித்து வரலாம். நாள்பட்ட சருமநோய்களான சோரியாசிஸ், சாதாரண சிரங்கு, நமைச்சல், புழுவெட்டு, மருக்கள் போன்ற நோய்களும் குணமாகிவிடும்.

*சின்னம்மை, தட்டம்மை போன்ற அம்மை நோய்களுக்குக் கிருமிநாசினியாக வேப்பிலையைப் பயன்படுத்தலாம்.

*புற்றுநோய் எதிர்ப்புத்தன்மை வேப்பிலைக்கு உண்டு. புற்றுநோய் வளர்ச்சியைத் தடைப்படுத்தக்கூடிய மருந்துகளில் வேப்பிலை பெரும்பங்கு வகிக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்