விரல்கள் செய்யும் விந்தை!

கருட முத்திரை

ருடன், ஆகாயம் எனும் காற்றுமண்டலத்தில் சுற்றி, அதை ஆள்வதைப் போல, உடலில் உள்ள காற்றைக் (வாயுவை) கட்டுப்படுத்தும் என்பதால், இந்த முத்திரைக்கு ‘கருட முத்திரை’ என்று பெயர். இந்த முத்திரையைச் செய்வதால் உடலில் உள்ள வாயுக்கள் சீராகும்.

எப்படிச் செய்வது?

நிமிர்ந்து அமர்ந்த நிலையில், கைகளை அடிவயிற்றுப் பகுதியில் வைத்து, உள்ளங்கை உடல் நோக்கியபடி, இடது கை மீது வலது கையை வைத்து, கட்டைவிரல்களைக் கோக்க வேண்டும். பார்க்க சிறகுகள் விரித்ததுபோல இருக்கும். இப்போது, விரல்களைச் சிறகு போல விரித்து அசைக்கவும். இவ்வாறு 10 முறை செய்ய வேண்டும். பிறகு, 20 விநாடிகள் அமைதியாக இருக்கவும். பிறகு, தொப்​புள் பகுதி, மேல் வயிறு, மார்புக்கூட்டுக்கு  நடுவில் என ஒவ்வொரு பகுதிக்கும், நேராக கைகளை வைத்து இதேபோல் செய்ய வேண்டும். முத்திரையை ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்யலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்