உங்கள் சருமம்... எந்த வகை?

பொதுவாக சிகிச்சைக்கு வருபவர்களிடம், “உங்களுக்கு என்ன மாதிரியான சருமம்?” என்று கேட்டால்  பலரும், “...ம்ம்ம்” என்று விழிப்பதைத்தான் பார்க்கிறேன். சிலர், கறுப்பு, சிவப்பு என்று நிறத்தைச் சொல்வார்கள். சிலர், “இதில் கூட வகைகள் உள்ளதா?” என்று கேட்பார்கள். சருமம் அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால், அதை பற்றி அடிப்படை கூட தெரிந்திருக்கவில்லை என்பதைத்தான் இவர்களின் பதில்கள் காட்டுகின்றன. இதனால், தங்கள் சருமத்துக்கு எது சரியாக இருக்கும் என்ற அடிப்படை கூட தெரியாமலேயே விளம்பரங்களை நம்பி கண்டகண்ட க்ரீம், லோஷன் வாங்குபவர்களின் எண்ணிக்கைதான் அதிகம்.

நமது சருமம் ஒரே மாதிரியானவை அல்ல. பார்ப்பதற்கு ஒன்று போலவே தெரிந்தாலும், ஒவ்வொருவருடைய சருமமும் ஒவ்வொரு விதமானவை. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேருக்கு ஐந்து வகையான  சருமம் இருக்க வாய்ப்பு உள்ளது. பொதுவாக, சாதாரண சருமம், வறண்ட சருமம், எண்ணெய் பசை சருமம், சென்சிடிவ் சருமம், வறட்சி மற்றும் எண்ணெய் பசை கலந்த சருமம் என்று சருமத்தை ஐந்து வகையாகப் பிரிக்கிறோம். எந்த மாதிரியான சருமம் என்று தெரிந்தால் மட்டுமே சருமத்தை முறையாக ஆரோக்கியமாக பராமரிக்க முடியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்