உடலினை உறுதிசெய் - 24

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சக்கி சலனாசனா (Chakki Chalanasana)

க்கி என்றால் அரைத்தல்; சலனா என்றால் அசைதல். அந்தக் காலத்தில் மாவு அரைக்க ஆட்டுக்கல்லைப் பயன்படுத்துவார்கள். திருகைக்கல்லைச் சுழற்றுவதுபோல உடலைச் சுழற்றுவதால், இந்த ஆசனத்துக்கு ‘சக்கி சலனாசனா’ என்று பெயர்.

விரிப்பின் மேல் கால்களை நீட்டி, அகட்டி அமர வேண்டும். கைகளைக் கோத்து, முன்பக்கம் நன்கு நீட்டி, மூச்சை இழுத்துப் பிடித்தபடி முன்புறம் குனிந்து, மேல் உடலை வலமிருந்து இடமாக வட்டமாகச் சுழற்ற வேண்டும். உடலைச் சுழற்றும்போது பின்புறம் எவ்வளவு இயலுமோ அவ்வளவு சாயலாம். பின்புறம் சாயும்போது, மூச்சை இழுத்துப்பிடிக்க வேண்டும். முன்புறம் வரும்போது மூச்சை விட வேண்டும். இப்படி ஐந்து முறை வட்டமடித்த பின், எதிர்த்திசையில் ஐந்து முறை உடலைச் சுழற்ற வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்