உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 18

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

தயத்துக்கு எப்படி ஹார்ட் அட்டாக்கோ அதுபோல, மூளைக்கு பிரைன் அட்டாக் அல்லது ஸ்ட்ரோக். மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவது அல்லது ரத்தக் கசிவு காரணமாக மூளைக்கு ரத்த ஓட்டம் தடைப்படுவதை பிரைன் அட்டாக் என்கிறோம்.  உடலின் ஒருபக்கம் செயல் இழப்பதால் தமிழில் இதை ‘பக்கவாதம்’ என்பார்கள். மாரடைப்புக்கு இருக்கிற விழிப்புஉணர்வு, பக்கவாதத்திற்்கு இல்லை. இன்றும் பக்கவாதப் பாதிப்பு ஏற்பட்டு ஒருநாள் கழித்துக்கூட சிகிச்சைக்கு வருபவர்களும் உண்டு. பல இடங்களில், சிகிச்சை இன்றி உயிரிழப்புகளும் நடைபெறுகின்றன.

நம்மை எல்லாவகையிலும் இயக்குவது மூளைதான். அந்த மூளை இயல்பாகச் செயல்பட, உணவும் ஆக்சிஜனும் தேவை. இந்த இரண்டும் ரத்தத்தின் மூலமே உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன. பக்கவாதம் ஏற்படுபவர்களுக்கு மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு அல்லது ரத்தக்கசிவு காரணமாக மூளை செல்களுக்கு உணவும் ஆக்சிஜனும் கிடைக்காமல்போகிறது. இதனால், இந்த செல்கள் உயிரிழக்கின்றன.

மூளையின் எந்தப் பகுதியில் பாதிப்பு ஏற்படுகிறதோ அதைப்பொறுத்து பேச்சு, பார்வை, நினைவாற்றல், உணர்ச்சி, தசைகளின் வலுத் தன்மை போன்றவை பாதிக்கின்றன. இதனால்தான், பக்கவாதப் பாதிப்பு வந்த இரண்டு மணி நேரத்துக்குள் சிகிச்சைக்கு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இந்த இரண்டு மணி நேரத்துக்குள் தகுந்த சிகிச்சை கிடைத்துவிட்டால், பாதிக்கப்பட்டவர் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பலாம். பொதுவாக, ரத்தக் குழாய் அடைப்புக் காரணமாகவே பிரைன் அட்டாக் வருகிறது. இவர்களுக்கு, இரண்டு மணி நேரத்துக்குள் இன்ட்ராவீனஸ் த்ராம்போலிசிஸ் (intravenous thrombolysis) சிகிச்சை அளித்தால் போதும். மூளை செல்கள் உயிரிழப்பைத் தடுத்துவிடலாம். நேரம் ஆகஆக மூளை செல்கள் உயிரிழப்பு அதிகரிக்கும். இதனால், நிரந்தர செயல் இழப்பு ஏற்படலாம் அல்லது உயிரிழப்பே ஏற்படலாம். மூளை செல்கள் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளன என்பதைப் பொருத்து பாதிப்பின் அளவு மாறுபடும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்