குழந்தைகளுக்கு வாங்கித்தரக் கூடாத பொருட்கள்!

விளையாட்டுப் பொருட்கள் குழந்தைப் பருவத்தின் மிகப்பெரிய புதையல். அது பாதுகாப்பற்றதாக இருந்தால் உடல்நலத்துக்கே பாதிப்பை ஏற்படுத்திவிடும். விளையாட்டுப் பொருட்கள் என்பது விளையாட்டுக்கானது மட்டும் அல்ல... குழந்தையின் புத்திக்கூர்மை, இணைந்து செயல்படும் இயல்பு, அவற்றைப் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற பொறுப்புஉணர்வு என்று பலவகைகளிலும் குழந்தையின் வளர்ச்சிக்குத் துணைபுரிபவை விளையாட்டுப் பொருட்கள்.

அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டரை லட்சம் குழந்தைகள் விளையாட்டு பொம்மைகளால் ஏற்பட்ட காயங்களுக்காக மருத்துவமனைக்கு வருகின்றனராம். ஆனால், இதுபோன்ற புள்ளிவிவரம் இங்கே இல்லை. அமெரிக்காவைக் காட்டிலும் அதிக அளவில் குழந்தைகள் இங்கே பாதிக்கப்பட்டுவருகின்றனர்.

அந்தக் காலத்தில், செப்பு சாமான், மரப்பாச்சி பொம்மை, பல்லாங்குழி, தாயக்கட்டை போன்ற விளையாட்டுப் பொருட்கள் தரத்திலும் பயன்பாட்டிலும் சிறந்ததாக இருந்தது. ஆனால், இன்றைய குழந்தைகளுக்கு வாங்கித்தரும் விளையாட்டுப் பொருட்களில் காரீயம் உள்ளிட்ட ரசாயனங்கள் ஒளிந்திருக்கிறது. எனவே, குழந்தைகளுக்கு டாய்ஸ் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை பற்றி தெரிந்திருக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோருக்கும் அவசியம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்