முதுமையிலும் இனிமை!

அக்டோபர் 1 - உலக முதியோர் தினம்

முதுமையை இரண்டாவது குழந்தைப்பருவம் என்பார்கள். பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என குடும்பத்தினர் ஒவ்வொருவரின் அன்பையும், அரவணைப்பையும் எதிர்பார்க்கும் காலம். அது கிடைக்காதபோது மனம் ஏக்கம் அடைந்து மனநலப் பிரச்னைகள் ஏற்படும். அதேபோல, முதுமையை ‘நோய்களின் மேய்ச்சல் காடு’ என்பார்கள். நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, ஊட்டச்சத்து குறைபாடு, முதுமை காரணமாக உறுப்புக்களின் செயல்திறன் குறைவு காரணமாக பல்வேறு உடல்நலக் குறைவு ஏற்படும். முதுமைக்காலத்தில் ஏற்படும் நோய்களைத் தடுக்க முடியாது, ஆனால், முன்னெச்சரிக்கையாக இருந்தால், பாதிப்பின் தீவிரத்தைக் குறைக்க முடியும். மகிழ்ச்சியான வாழ்வு வாழ முடியும்.

வயதாவதால் ஏற்படும் பிரச்னைகள்


பார்வை மங்குதல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், தூக்கமின்மை, மலச்சிக்கல், காது மந்தம், சோர்வு, கை, கால்கள் நடுக்கம் போன்ற பிரச்னைகள் பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும். உதாரணமாக, காது மந்தம் ஏற்பட்டால் மருத்துவரின் ஆலோசனையின்பேரில் காது கேட்கும் கருவி பொருத்திக்கொள்ள வேண்டும். முதுமையால் ஏற்படும் இயல்பான பிரச்னைகளைக் கவனிக்காமல் இருந்தால் உடல் நலம் பாதிக்கப்படுவதோடு, தன்னம்பிக்கையும் குறைந்து தாழ்வு மனப்பான்மையும் ஏற்படுகிறது.

முதுமைக்கால நோய்கள்

டிமென்ஷியா எனும் மறதி நோய், பார்க்கின்சன் எனும் உதறுவாதம், சிறுநீர் அடக்கவியலாமை (Urinary incontinency), புற்றுநோய், அடிக்கடி கீழே விழுதல் பிரச்னை, எலும்புத் தேய்மானம், ப்ராஸ்டேட் வீக்கம் போன்றவை முதுமையில் ஏற்படக்கூடிய நோய்களில் குறிப்பிடத்தக்கவை. மத்திய வயதில், உயர் ரத்த அழுத்தம், இதயநோய்கள், சர்க்கரை நோய் போன்றவை ஏற்படும். இவற்றைப் பெரும்பாலும் குணமாக்க இயலாது என்றாலும், தேவையான சிகிச்சைகள், பயிற்சிகள் எடுத்துக்கொள்வதன் மூலம் இவற்றின் பாதிப்பின் கடுமையில்இருந்து தப்பலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்