ஸ்டார் ஃபிட்னெஸ்

திபா கர்மாகர்

லிம்பிக் என்றாலே “ச்சீ ச்சீ...கசக்கும்” என்பதுதான் இந்தியாவின் நிலை. அதிலும் பெண் சாம்பியன்களை கைவிரலில் எண்ணிவிடலாம்.  இந்தியாவில் இருந்து சென்று ஜிம்னாஸ்டிக்கில் கலக்கியவர்கள் யாருமே இல்லை என்ற நிலையை உடைத்தவர் திபா கர்மாகர். வெண்கல பதக்கத்தை ஜஸ்ட் மிஸ் செய்தாலும், இந்தியர்கள் அத்தனை பேரின் அன்பையும் அள்ளிச் சென்ற நம்பிக்கைப் பெண். ஃபிட்னெஸ் அதிகம் தேவைப்படும் ஜிம்னாஸ்டிக்கில் கலக்கும் திபாவின் வொர்க்அவுட் திட்டங்கள் என்ன?

*திபா 151 செ.மீ உயரம், 51 கிலோ எடை. காலை 7 மணிக்கு எழுந்து, 8 மணிக்கெல்லாம் பிரேக்ஃபாஸ்ட் முடித்து பயிற்சிக்கு தயாராகிவிடுவார். மதியம் 12 மணி வரை தொடர்ந்து பயிற்சி. 1 மணிக்கு லன்ச் முடித்துவிட்டு, 3.30 வரை தூக்கம். மீண்டும் 4.30க்கு ஆரம்பித்தால் 8.30 வரை ஜம்பிங், ரன்னிங்தான்.

*“வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்றால், முதலில் ரிஸ்க் எடுக்க வேண்டும்” - திபாவின் ஃபேவரைட் வாசகம் இது. முயற்சியே எடுக்காமல் வெற்றி மட்டுமில்லை, ஆரோக்கியமும் வந்து சேராது. அதனால், சிறியதோ பெரியதோ, உங்கள் வொர்க்அவுட்டை இன்றே ஆரம்பியுங்கள். மற்றவை தானாக நடக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்