கிலியை ஏற்படுத்தும் எலிக்காய்ச்சல்!

சாதாரணமாக வீட்டைச் சுற்றித் திரியும் எலியால் என்ன பிரச்னை என்று   நினைப்போம். ஆனால், அது எலிக்காய்ச்சல் என்ற கொடிய பாதிப்பை பரப்புகிறது என்றால் நம்பமுடிகிறதா?

மழைக்காலம் வந்தாலே கொசுவால் பரவும் டெங்கு,  மலேரியா தலைதூக்க ஆரம்பித்துவிடுகிறது. இதனுடன், தேங்கும் மழை நீரில் எலியின் கழிவு கலப்பதன் மூலம் எலிக்காய்ச்சல் ஏற்படுகிறது.

எலிக்காய்ச்சல்

தெருக்களில், சாக்கடைகளில் வசிக்கும் எலியின் சிறுநீரில் லெப்டோஸ்பைரா (Leptospira) என்ற திருகாணி போன்ற தோற்றம் கொண்ட பாக்டீரியா கிருமி இருக்கிறது. எலியின் சிறுநீரை மிதிக்கும்போது அல்லது எலியின் சிறுநீர் கலந்த மழைநீர், கழிவுநீரை மிதிக்கும்போது, எலி கடிப்பதன் மூலமாக இந்த பாக்டீரியா கிருமி மனித உடலுக்குள் நுழைகிறது. இந்தக் கிருமி எலியின் உடலில் மட்டும் வசிப்பது இல்லை, நாய், பூனை போன்ற விலங்குகள் மூலமாகவும் பரவலாம்.

உடலில் காயங்கள், புண்கள் உள்ள மனிதர்கள் இந்த நீரில் புழங்கும்போது, இந்தக் கிருமிகள் அவர்களது உடலுக்குள் நுழைகின்றன. ரத்தத்தின் மூலம் கல்லீரல், சிறுநீரகம், நரம்பு மண்டலத்தை அடைந்து அங்கு வளர்ச்சியடைகின்றது. பின்னர், அது பாதிப்பை வெளிப்படுத்துகிறது.

அறிகுறிகள்

தொடர் காய்ச்சல், தலைவலி, வாந்தி, வயிற்றுவலி, கண் எரிச்சல், உடல் வலி போன்றவை எலிக்காய்ச்சலின் முக்கிய அறிகுறி. இந்த அறிகுறிகள் யாருக்கு இருந்தாலும், உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

பரிசோதனைகள்


காய்ச்சலின் அறிகுறிகள் தென்பட்டவுடன், உடனடியாக மருத்துவரை அணுகி ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும். ரத்த மாதிரிகள் பிசிஆர், எலிசா, டார்க் ஃபீல்டு எக்ஸாமினேஷன் (PCR , ELISA, dark field examination) ஆகிய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படும். இந்தப் பரிசோதனைகளில் லெப்டோஸ்பைரா ஆன்டிபாடி மற்றும் ஆன்டிஜன்கள் இருந்தால், அது நுண்ணோக்கியில் தெரியும். இதைக் கொண்டு இந்தக் காய்ச்சலை உறுதிப்படுத்தலாம். சிலருக்கு, அவர்களின் உடல்நிலைக்கு ஏற்ப சிறுநீர்ப் பரிசோதனையும் செய்ய வேண்டி இருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்