ஆர்த்ரைட்டிஸ் வெல்வோம்!

டுற பாம்பை மிதிக்கிற வயசு’ என்று சொல்லும் இளம் வயதினர்கூட, ‘கை, கால்வலி, மூட்டுவலி’ என மருத்துவமனைக்குப் படை எடுக்கிறார்கள். இவர்களுக்கு ஆஸ்ட்டியோ ஆர்த்ரைட்டிஸ், ருமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் என்று எலும்பு மூட்டு தொடர்பான பிரச்னைகள் இருப்பதைக் கண்டறியும்போது, அதிர்ச்சியுடன் அவர்கள் கேட்பது, “வயதானவர்களுக்குத்தானே இந்த பிரச்னைகள் வரும்?” என்பதுதான்.  உண்மையில், ஆர்த்ரைட்டிஸ் வருவதற்கான பல காரணங்களில் வயது அதிகரித்தலும் ஒன்று. ஆர்த்ரைட்டிஸ் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் வரக்கூடும்.

உடலில், இரண்டு எலும்புகள் சேரும் இடத்தை இணைப்புகள் (Joints) என்கிறோம். இரண்டு எலும்புகளை ஒருங்கிணைக்க இணைப்புத் திசுக்களும் கார்டிலேஜ் திசுக்களும், லிகமென்ட் எனப்படும் தசைநார்களும், குறுத்தெலும்புகளும் உதவுகின்றன. கை, கால்மூட்டுகள் மற்றும் உடலில் இரண்டு எலும்புகள் கூடும் இணைப்புகளில் வலி, வீக்கம், இறுக்கமான உணர்வு இருந்தால் அது ஆர்த்ரைட்டிஸ் பிரச்னையாக இருக்கக்கூடும்.

இணைப்பு எலும்புகளுக்கு இடையே மெத்தை போன்று உள்ள கார்ட்டிலேஜ் எனப்படும் குழைவான திசுக்களின் அமைப்பு நைந்துபோகும் போது குறுத்தெலும்புகளும், மூட்டு எலும்புகளும் ஒன்றோடு ஒன்று உராய்ந்து தேய்வதால், வலி, வீக்கம் ஏற்பட்டு ஆர்த்ரைட்டிஸ் பிரச்னை ஏற்படுகிறது. இந்தப் பிரச்னை ஏற்படுவதற்கு அதிக எடை, வயதாகுதல், பரம்பரை, லிகமென்ட் கிழிந்துபோதல், விபத்துகளில் அடிபடுதல், புகைபிடித்தல், தன்நோய் எதிர்ப்பு ஆற்றல் எனப் பல காரணங்கள் உள்ளன.

நம்முடைய நோய் எதிர்ப்பு செல்களே நம்முடைய மூட்டுப்பகுதியைத் தாக்கி, வீக்கம் உள்ளிட்ட பாதிப்பை ஏற்படுத்துவது ருமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ். இது ஆட்டோ இம்யூன் பாதிப்பு. இளம் வயதினர் அதிக அளவில் பாதிக்கப்படுவதற்கு இதுவே முக்கிய காரணம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்