விரல்கள் செய்யும் விந்தை!

உஜாஸ் முத்திரை

ஜாஸ் என்றால் விடியல் அல்லது புதிய தொடக்கம் என்று அர்த்தம். பூமியின் ஒவ்வொரு நாளும் புதிதாய் விடிவது போல, உஜாஸ் முத்திரையும் நம்மைப் புதிதாக மலரச் செய்கிறது. ஒரு புதிய தொடக்கத்தைக் கொடுக்கிறது, உற்சாமான மனநிலையைப் பெருக்குகிறது என்பதால், இந்த முத்திரைக்கு ‘உஜாஸ் முத்திரை’ என்று பெயர். 

எப்படிச் செய்வது?

விரிப்பில் சப்பணம் இட்டு அமர்ந்த வாறோ, கால்களைத் தரையில் நன்கு பதித்தபடி நாற்காலியில் அமர்ந்தோ செய்யலாம். கைகள் உடலைத் தொடக் கூடாது. தொப்புளுக்குக் கீழே அடிவயிற்றுப் பகுதியில் வைத்து, இரு கை விரல்களையும் கோத்துக் கொள்ள வேண்டும். தினமும் காலை, மாலை இரு வேளையும் 5-15 நிமிடங்கள் வரை செய்யலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்