உடலினை உறுதிசெய் - 21

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
நௌகா சன்சலானாசனா

டகை துடுப்பால் ஓட்டிச் செல்வது போல செய்வதுதான் இந்த ஆசனத்தின் செயல்முறை.தரையில், கால்களை நீட்டி அமர வேண்டும். கை கட்டைவிரலை உள்ளே வைத்து மற்ற விரல்களை மூடி, கைகளை தோள்களின் அருகே வைத்தபடி, ஆழ்ந்து மூச்சை உள்ளே இழுத்துக்கொண்டு முடிந்த அளவுக்குப் பின்புறம் சாய வேண்டும். பிறகு, மூச்சை விட்டுக்கொண்டே இரு கைகளாலும் துடுப்புப் போடுவது போல செய்ய வேண்டும். பின்பக்கம் சாயும்போது மூச்சை இழுப்பது, முன்பக்கம் வரும்போது மூச்சை விடுவது எனச் செய்ய வேண்டும். கைகளை முன்புறம் சுழற்றி மூன்று முறை, பின்புறம் சுழற்றி மூன்று முறை செய்த பின், ரிலாக்ஸ் செய்ய வேண்டும்.

கவனிக்க:
தோள்பட்டையில் அடி, தீவிர முதுகுவலி,  குடலிறக்கம், பக்கவாதம், வலிப்பு நோய், காய்ச்சல், உடல்வலி போன்ற பாதிப்பு உள்ளவர்கள், அறுவைசிகிச்சை செய்தவர்கள், கர்ப்பிணிகள் இந்தப் பயிற்சியைத் தவிர்க்க வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்