கன்சல்ட்டிங் ரூம்

கே.நெல்சன் சேவியர், மதுரை.

“எனக்கு வயது 40. நெஞ்சில் அடிக்கடி சுரீர் சுரீர் என்று வலி தோன்றுகிறது. மாரடைப்பின் அறிகுறியோ என அஞ்சி டாக்டரிடம் கன்சல்ட் செய்தேன். ‘இல்லை’ என்கிறார். ஆனால், வலி இருந்துகொண்டே இருக்கிறது. அது எதனால்?”

டாக்டர் ராஜ்குமார், பொது மருத்துவர், தேனி

“மாரடைப்பு என்பது அழுத்தமாக அமுக்கும் உணர்வுடன்கூடிய வலி. இடதுபுறம் மட்டும் வலி ஏற்பட்டால், அது மாரடைப்பு. ஆனால், நெஞ்சில் எந்த இடத்தில் வலி ஏற்படுகிறது என்பதைக் குறிப்பிட முடியாது. நீங்கள் சொல்வதைக் கவனித்தால், உங்களுக்கு ‘புளூராய்டிக் பெயின்’ என்று நினைக்கிறேன். அதாவது, நுரையீரலுக்கு மேல் ‘புளூரா’ என்ற உறை உள்ளது. நுரையீரல் இயங்கும்போது இந்த உறையின் மீது உரசுவதால், புளூராய்டிக் வலி ஏற்படுகிறது. பொதுவாக, மூச்சு இழுத்துவிடும் போது தோல்களில் உராய்வு ஏற்படும். இதனால், நெஞ்சில் சுருக் சுருக் என்று குத்தும் உணர்வு ஏற்படும். புளூராய்ட்டிக் பெயினில் வலிக்கும் இடம் மாறிக்கொண்டே இருக்கும். அதற்குக் காரணம், மூச்சு இழுத்துவிடும்போது ஏற்படும் நுரையீரலின் உராய்வுதான்.  மேலும், வாயுத் தொல்லைகள் இருக்கும்போதும், அசிடிட்டி எனப்படும் வயிற்று எரிச்சல் ஏற்படும் போதும் நெஞ்சில் வலி ஏற்படும். புகைபிடிப்பவர்களுக்கும், தூசு மற்றும் புகை சூழ்ந்த இடத்தில்  வேலை செய்பவர்களுக்கும் இந்த வலி ஏற்படலாம். உணவுக்குழாயின் வழியாக உணவானது வயிற்றைச் சென்றடையும். அவ்வாறு செல்லும்போது, வயிற்றில் உள்ள அமிலம் வயிற்றில் இருந்து உணவுக்குழாய்க்கு வந்துவிடும். அப்போது, வயிற்றுக்கும் நெஞ்சுப் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் ஒருவித எரிச்சல் உணர்வு ஏற்படும். இவை அனைத்தும் புளூராய்டிக் பெயினின் பொதுவான அறிகுறிகள். மேலும் வலி அதிகமானால், மருத்துவரின் ஆலோசனையை அணுகுவது நன்று.

தடுக்கும் வழிமுறை

புகை, மதுப் பழக்கத்தைத் தவிர்த்தல்.

தூசு, புகை உள்ள இடங்களைத் தவிர்த்தல்.

உணவு உண்டவுடன் உறங்குவதைத் தவிர்த்து, சிறிது நேரம் கழித்து படுக்கைக்குச் செல்வது.

இடதுபுறமாக சாய்ந்து உறங்குவது.

அடிக்கடி கார்பனேட்டட் குளிர்பானங்கள் பருகுவதைத்  தவிர்ப்பது.

சாதாரண பெயின்கில்லர் பயன்படுத்தினாலே வலியைக் கட்டுப்படுத்தலாம்.”

கே.எஸ்.நிர்மலாராணி, திருவாரூர்.

“எனக்கு வயது 24. என் இடது தோள்பட்டையிலும் அடிப்புற புஜத்திலும் இரண்டு கொழுப்புக்கட்டிகள்  (லைப்போமா) உள்ளன. என் தந்தைக்கும் இந்தப் பிரச்னை இருந்தது. “அவற்றால் வலியோ பிரச்னையோ இல்லாத வரை நீக்க வேண்டாம்” என்று சிலர் சொல்கிறார்கள். எனக்கு அதை நீக்கினால் பரவாயில்லை என்று தோன்றுகிறது. கொழுப்புக்கட்டிகளை நீக்கலாமா? எதனால் இவை ஏற்படுகின்றன?”

டாக்டர் வி.சத்தியநாராயணன், பொது அறுவைசிகிச்சை நிபுணர், தர்மபுரி.


“கொழுப்புக்கட்டிகள் என்பவை தோலுக்கு அடியில் உள்ள கொழுப்புத்திசுக்களின் திரட்சியால் உருவாகின்றன. பரம்பரை காரணமாக சிலருக்கு இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. சிலருக்கு ஒரு இடத்தில் தோன்றினால், வேறு இடங்களிலும் பரவ வாய்ப்பு உள்ளது.  இந்தக் கொழுப்புக்கட்டிகள், புற்றுநோய் கட்டிகளாக மாறுமோ என்று சிலர் அஞ்சுகிறார்கள். அப்படி அச்சப்படத் தேவை இல்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்