இனி எல்லாம் சுகமே - 16

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
செரிமானம் அறிவோம்!

ணையத்தில் சுரக்க வேண்டிய ஹார்மோன்கள், என்சைம்கள்  ஒழுங்காக சுரக்கவில்லை எனில் செரிமான பிரச்னை, சர்க்கரை நோய் வரும் என ஓரளவுக்கு அனைவருக்கும் தெரியும். ஆனால், கணைய அழற்சி, கணையப் புற்றுநோய் குறித்த விழிப்புஉணர்வு இந்தியாவில் மிகவும் குறைவு. கணைய அழற்சியை திடீர் அல்லது குறுகிய கால கணைய அழற்சி, நாட்பட்ட கணைய அழற்சி என இரண்டாகப் பிரிக்கலாம்.

திடீர் அல்லது குறுகிய கால கணைய அழற்சி (Acute Pancreatitis)

பித்தப்பையில் இருந்து வரும் பித்தநாளத்துடன் கணையத்தில் இருந்து வரும் நாளம் இணைந்து சிறுகுடலில் இணைகின்றது. பித்தப்பைக் கல் இந்த குழாயை அடைக்கும்போது,  என்சைம்கள் வெளியேறுவது தடைப்பட்டு கணையத்திலேயே தங்கிவிடுகிறது. இப்படி கணையத்தில் தங்கும் என்ஸைம், கணைய செல்களை செரிமானம் செய்ய ஆரம்பிக்கும்.  இதனால், கணையம் மற்றும் என்ஸைம் அழுகி விஷமாகிவிடும். இந்த விஷம் உடலின் எந்தப் பகுதியையும் பாதிக்கலாம். சில சமயங்களில் மாத்திரை, மருந்துகள் கொடுத்தும் கட்டுப்படாது.

பித்தப்பைக் கற்களை போலவே ஆல்கஹாலும் ஆபத்தானது. இந்தியாவில் கணைய அழற்சிக்கு மிக முக்கியமான காரணமே ஆல்கஹால்தான். அளவுக்கு அதிகமாக ஆல்கஹால் அருந்தும்போது, அதில் உள்ள ரசாயனங்கள் கணையத்தின் என்சைம்களைப் பாதிக்கின்றன. இதனாலும், கணைய அழற்சி ஏற்படுகிறது. கணைய அழற்சி மிக மிக மோசமான வலியைத் தரும். மேல் வயிற்றில் ஆரம்பிக்கும் வலி அப்படியே முதுகுப்பக்கம் வரை பரவும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்