ஸ்வீட் எஸ்கேப் - 16

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சர்க்கரையை வெல்லலாம்

ர்க்கரை நோயால் வரக்கூடிய பாதிப்புகள் என்றதும் கால்புண், கண்ணில் ஏற்படும் குளுக்கோமா, சிறுநீரகப் பாதிப்புகள்தான் நம் நினைவுக்கு வரும். உடலின் மிக முக்கியமான மற்ற உறுப்புக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் நம் நினைவுக்கு வருவது இல்லை. நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் பயன்படுத்தும் முக்கியமான ஓர் உறுப்பு நுரையீரல். சர்க்கரை நோய் வந்துவிட்டால், நுரையீரல் தொடர்பான சில பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. நுரையீரல் செயல்பாட்டில், அதாவது நம்முடைய சுவாசத்தில், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும் சர்க்கரை நோய் இருக்கிறது.

இதனுடன், கொழுப்பு நிறைந்த உணவை எடுத்துக்கொள்வது, உடல் உழைப்பு இன்மை போன்ற ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை, புகைப்பழக்கம் என ஒவ்வொன்றும் கூடும்போது, சுவாசித்தல் திறன் குறைகிறது.

நுரையீரல் நோய்த்தொற்று

சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்காத சர்க்கரை நோயாளிகளுக்கு, நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்திறன் குறைகிறது. இதன் மூலம், எந்த வகையான நோய்த்தொற்றும் எளிதில் ஏற்படக்கூடிய வாய்ப்பு உருவாகிறது. அதாவது, மற்றவர்களைக் காட்டிலும் சர்க்கரை நோயாளிகளுக்கு நோய்த்தொற்று அதிகமாகவும் விரைவாகவும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால்தான், சர்க்கரை நோயாளிகளுக்கு சாதாரண சளி, ஃபுளு காய்ச்சல், இதர தொற்றுநோய்கள் விரைவாக ஏற்படுகின்றன; குணமாகவும் நாளாகிறது. எனவேதான், சர்க்கரை அளவைக் கட்டுக்குள்வைத்திருந்து, சர்க்கரை நோயை மிகவும் கவனமாகக் கையாள வேண்டும் என்று மீண்டும் மீண்டும் சொல்கிறேன்.

நுரையீரலைப் பாதிக்கும் இரண்டு மிக மோசமான நோய்த்தொற்றுகள் உள்ளன. அவை, நிமோனியா மற்றும் நுரையீரல் காசநோய். இவை இரண்டுமே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை.

நிமோனியா

நிமோனியா தொற்று ஏற்பட்டால் நுரையீரலில், சுவாசக் குழாயில் வீக்கம் ஏற்படுகிறது. இதனால், காற்று உள்ளே நுழைவதில் பாதிப்பு ஏற்படுகிறது. இதைச் சமாளிக்க, நுரையீரல் இன்னும் அதிக அளவில் செயல்படவேண்டியிருக்கிறது. இந்தப் பாதிப்பை ஏற்படுத்தும் பாக்டீரியா கிருமிக்கு ஸ்ட்ரெப்ட்டோகாக்கஸ் நிமோனியா (Streptococcus pneumoniae) என்று பெயர்.

சர்க்கரை நோய் தவிர்த்து, சிறுநீரகம், கல்லீரல், இதயப் பிரச்னைகள், ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்னைகள்கூட நிமோனியா நோய்த்தொற்றுக்குக் காரணமாக இருக்கலாம். நிமோனியா நோய்த்தொற்று ஏற்பட்டால், சுவாசித்தலில் சிரமம், காய்ச்சல், அதிவேக இதயத்துடிப்பு, குளிர் அல்லது அதீத வெப்பம் என உடல் வெப்பநிலையில் மாற்றம், பசியின்மை, நெஞ்சுவலி போன்ற அறிகுறிகள் இருக்கும். நிமோனியாவுக்குச் சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ளவில்லை எனில், மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். நுரையீரலில் நீர்கோத்து, சுவாசிக்க முடியாத சூழலை ஏற்படுத்தும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்