மருந்தில்லா மருத்துவம் - 16

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

முழங்கால் மூட்டு எப்படிப் பாதிப்புக்கு உள்ளாகிறது... அதற்கு, மருந்தில்லா மருத்துவத்தில் எப்படி நிவாரணம் அளிப்பது என்று பார்ப்போம். முழங்கால்வலி அல்லது மூட்டுவலி என்பதை, ‘ஆர்த்ரைடிஸ்’ என்பார்கள். ஆர்த்ரைடிஸ் ஏற்படப் பல காரணங்கள் உள்ளன.

முழங்கால் என்பது மூன்று எலும்புகளாலான ஒரு மூட்டு, இவற்றை ஒருங்கிணைக்க, டென்டன், லிகமென்ட் என்பவை உள்ளன. எலும்புகள் ஒன்றோடு ஒன்று உராய்ந்து, தேய்ந்துவிடாமல் இருக்க  இவற்றுக்கு இடையே குருத்தெலும்புகள் உள்ளன. மூட்டு அசைவுக்குத் தொடைப் பகுதியிலும், ஆடுசதைப் பகுதியிலும், வெகு அடர்த்தியான தசைகள் உள்ளன. இந்தத் தசைகளுக்கும் முழங்காலுக்கும் தண்டுவடத்தில் இருந்து வரும் நரம்புகள் உணர்ச்சி ஊட்டுகின்றன. இவை அனைத்தும் ஒருங்கிணைந்து வேலை செய்யும்போது, முழங்கால் ஆரோக்கியமாக இருக்கும்.
பருமனான உடலைத் தாங்கும் சக்தி கால்களுக்குக் குறைவதால், மூட்டுவலி வரலாம். கால் முட்டி மீது அதிக அழுத்தம் கொடுக்கும் டென்னிஸ், கால்பந்து போன்ற விளையாட்டு வீரர்களுக்கு இந்த வலி வரக்கூடும். அதே சமயம், போதிய உடல் உழைப்பு, உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும் இந்தப் பிரச்னை வரலாம். தவறான தேகப் பயிற்சி, தவறான யோகா பயிற்சிகளினாலும் மூட்டுவலி உண்டாகலாம். ஒரு சில விளையாட்டு வீரர்களுக்கு மூட்டுக்களை இணைக்கும் லிகமென்ட் கிழியலாம். இதற்கு, அறுவைசிகிச்சை ஒன்றே தீர்வு என்பார்கள்.

62 வயதான ஒரு பெண்மணி, ஆறு மாதங்களுக்கு முன்பு தவறி விழுந்ததில், வலது முழங்காலில் அடிபட்டிருக்கிறது. வலிக்கு எந்த சிகிச்சையும் பலன் அளிக்காமல் என்னை அணுகினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்