வளர்ந்துவிட்டேன் அம்மா...

பெண்ணின் உடல், மனம் சார்ந்த வளர்ச்சியில் மிக முக்கியமான மைல்கல் பூப்பெய்துதல். இது பெண்ணுக்கு மட்டும் அல்ல... ஆணுக்கும் மிக முக்கியமான பருவம். செக்ஸ் என்றாலே பாவமான விஷயம் என்று கருதிக்கொண்டு, அடிப்படையாகத் தெரிந்திருக்க வேண்டிய உடலியல் சார்ந்த விஷயங்களைக்கூட சொல்லித்தர தயங்குகிறோம். இன்றைக்கும் பெரும்பான்மையான பள்ளிகளில், உயிரியல் பாடத்தில்வரும் பூப்பெய்துதல், இனப்பெருக்க மண்டலம் பற்றிய பாடங்கள் வரும்போது,  ஆசிரியர் வேகமாகக் கடந்துவிடுவார் அல்லது அதை பற்றி எடுக்காமல் தவிர்த்துவிடுவார்.

இந்தச் சூழலில் பெண் குழந்தைகளுக்குத் தேவையான விழிப்புஉணர்வை யார்தான் கற்றுத் தருவது? அவர்களின் குழப்பங்களைத் தீர்க்க யாராவது பதில் சொல்ல வேண்டும். அது ஏன் பெற்றோராக இருக்கக் கூடாது? பெண் குழந்தையை பூப்பெய்துதலுக்கு எப்படித் தயார் செய்ய வேண்டும்?

*குழந்தைப் பருவத்தில் இருந்து, பதின் பருவத்தை அடையப்போகும் நிலை, பூப்பெய்துதல். இதனால், உடல் அளவிலும் மனதளவிலும் மாற்றங்கள் அடைவதும் வளர்ச்சிக்கான அறிகுறி என்று சொல்லித்தர வேண்டும்.

*பொதுவாக, பெண் குழந்தைகள் வயதுக்கு வரும் காலகட்டம் 11 - 14. அவரவர் உடல்நிலையைப் பொறுத்து இந்தக் காலகட்டம் மாறும். இன்னும் இளம் வயதிலேயேகூட பெண் குழந்தைகள் பூப்பெய்துகின்றனர். எனவே, பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று இல்லாமல், முன்னரே குழந்தைகளிடம் மாதவிடாய் பற்றி சொல்லித்தர வேண்டும்.

*எட்டு அல்லது ஒன்பது வயது தொடங்கிய பெண் குழந்தைகளிடம்,  உன்னுடைய  மார்பகப் பகுதிகள் வளர்ச்சியடையும். இந்த வளர்ச்சி  இரண்டு மூன்று ஆண்டுகள் வரை இருக்கலாம். சிலருக்கு ஒரு மார்பகம் அதிக வளர்ச்சியும், இன்னொரு மார்பகம் சற்று குறைவான வளர்ச்சியாகவும் இருக்கலாம். இதற்குப் பயம் தேவை இல்லை. இது இயல்புதான் என்பதை உணர்த்த வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்