நோயற்ற வாழ்வுக்குத் தாய்ப்பால்!

லக தாய்ப்பால் விழிப்புஉணர்வு வாரம் ஆகஸ்ட் 1 முதல் 7-ம் தேதி வரை கொண்டாடப்பட்டது. இதை, டாக்டர் விகடன், சென்னை மேத்தா மருத்துவமனையுடன் இணைந்து ஒருவார விழிப்புஉணர்வு நிகழ்வாக ஏற்பாடு செய்திருந்தது. தாய்மார்கள்-மருத்துவர்கள் சந்திப்பு, கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு விழிப்புஉணர்வு ஏற்படுத்துதல், பட்டினப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்குத் தாய்ப்பால் புகட்டுதலின் அவசியம் குறித்த விழிப்புஉணர்வு போன்ற தொடர் நிகழ்வுகள் இனிதே நிகழ்ந்தன.
 
தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும் குழந்தைக்கும் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய டாக்டர்கள், “தாய்ப்பால் அளிப்பதால் பெண்ணுக்குக் கர்ப்பப்பைவாய், மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைகின்றன. எதிர்காலத்தில் குழந்தைக்கு சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு உள்ளிட்ட பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புகளும் குறைகின்றன. குழந்தைக்கு ஓராண்டு வரை தாய்ப்பால் கட்டாயம் புகட்ட வேண்டும். அதிலும், முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே அளிக்க வேண்டும். ஆறு மாதங்களுக்குப் பிறகு, தாய்ப்பாலுடன் வேறு சத்தான உணவுகளை அறிமுகப்படுத்தலாமே தவிர, தாய்ப்பால் புகட்டுவதை நிறுத்தக் கூடாது” என்றனர்.

4-ம் நாள் நிகழ்ச்சியாக, சென்னை ‘நீதிபதி பஷீர் அகமது சையத் மகளிர் கல்லூரி’ மாணவிகளுக்கு ஸ்லோகன், ஓவியப்போட்டி நடத்தப்பட்டன. இதில், ஏராளமான மாணவிகள் பங்கேற்று, தாய்ப்பால் புகட்டுதலின் அவசியத்தை விளக்கும் ஸ்லோகன், ஓவியங்களை வரைந்தனர். இதில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு அளிக்கப்பட்டது. 6-ம் நாள் நிகழ்ச்சியாக, சென்னை மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களுக்குச் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது. இறுதியாக, 7-ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் விழிப்புஉணர்வு நடைப்பயணம் நடந்தது. இதில், 300-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று தாய்ப்பால் அவசியம் பற்றி பிரசாரம் செய்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்