ஸ்டார் ஃபிட்னெஸ்

காஜல் அகர்வாலுக்கு சினிமா உலகில் இது 10-ம் ஆண்டு. இளமையும் ஃபிட்னெஸும் மாறாமல் 10 ஆண்டுகள் தொடர்ந்து இருக்கும் வெகுசிலரில் காஜலும் ஒருவர். தெலுங்கில் மகேஷ் பாபு, பவன் கல்யாண் படங்களுக்கு அடுத்து, இப்போது தமிழில் அஜித்துடன் டூயட் ஆடத் தயாராகிவிட்டார் காஜல். இந்தச் சிரிப்பும், ஸ்லிம் சைஸும் மாறாமல் இருப்பதன் ரகசியம் என்னவெனக் கேட்டோம்...

“யோகா. நிறைய பேர் சொல்லியிருப்பாங்க. நானும் அதையே சொல்றேன். ரொம்ப எளிமையான, முழுமையான உடற்பயிற்சி யோகாதான். அதுவும் அதிகாலையில் செய்யும் யோகா நமக்கு அந்த நாளை அழகாக்கும். மிஸ் பண்ணாம யோகா பண்ணுங்க.”

“புல்லாங்குழல் இசைக் கலைஞன் தன் புல்லாங்குழலை அலட்சியமாகப் பாத்துப்பாரா? ஒரு நடிகையா என் ஆரோக்கியம்தான் எனக்கு முக்கியம். அதுக்குக் கூடுதல் கவனம் செலுத்தறேன். எல்லோருக்குமே அவங்களோட உடல் ஆரோக்கியம் முக்கியம் என்பது தெரியணும். அந்த எண்ணம் வந்துட்டா, உடற்பயிற்கள் தானா நடக்கும்.”

“நீச்சல் எனக்கு மிகப்பெரிய பொழுதுபோக்கு. அது என்னுடைய ஸ்ட்ரெஸ் பஸ்டரும்கூட. வாரத்துல மூணு நாட்கள் ஜிம்முக்குப் போவேன். ஆனா, நேரம் கிடைக்கும்போது எல்லாம் நீச்சல் அடிப்பேன். நீச்சல், நம்ம ஃபிட்னெஸுக்கு மட்டும் அல்ல, சருமத்துக்கும் நல்லது.”

“எதுவாக இருந்தாலும் இயற்கையாக இருக்க வேண்டும் என்பது என் பாலிசி. எந்த பிளாஸ்டிக் சர்ஜரியையும் செய்துகொண்டது இல்லை. இயற்கையோடு இணைந்து வாழ்தலே ஆரோக்கியத்துக்கான ஒரே வழி.”

“இயல்பாவே நான் நிறைய சாப்பிட மாட்டேன். ஆனா, ஸ்வீட்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். தமிழ், தெலுங்கு, இந்தின்னு பல மொழிகளில் நடிப்பதால், அதிகமாகப் பயணம் செய்ய வேண்டும். அதனால், கொஞ்சம் கவனமா சாப்பிடணும். என்னோட டயட்டீஷியன் நானேதான். நமக்கு என்ன வேணுங்கிறது நமக்குத்தான் நல்லா தெரியும்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்