கண் நலம் காக்கும் களா!

ரத்தில் இருக்கும் பலாக்காயைவிட, கையில் இருக்கும் களாக்காய் மேல்’ என்று சொல்வார்கள். உண்மையில், வடிவில் சிறியது என்றாலும் களாக்காய் மருத்துவக் குணத்தில் பெரியது. முட்புதர்களிலும், கிராமங்களில் வேலி ஓரங்களிலும் வளரும் களா, நம் மண்ணின் மகிமை சொல்லும் சித்த வைத்தியத்தில் முக்கிய மருந்து. இன்றும் கிராமங்களில் அனைவரும் விரும்பிச் சாப்பிடும் காய்.

களாகாயில் உள்ள சத்துக்கள்

இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ, அஸ்கார்பிக் அமிலம், புரதச்சத்து, கொழுப்புச்சத்து நிறைதுள்ளன.  களாச்செடி, எப்போதும் பசுமையாக இருக்கும் பெருஞ்செடி. இது, ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் பூக்கும். மே, ஜூன், ஜூலை மாதங்களில் காய்க்கும். காயாகவும் பறிக்கலாம் பழமாகவும் பறிக்கலாம். களாக்காயில், சிறுகளா, பெருங்களா என இருவகை உள்ளன. இரண்டுமே மருத்துவப் பயன்கள் நிறைந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்