ஈஸி 2 குக்

சோயா பான் கேக்

தேவையானவை: அரிசி மாவு - 3/4 கப், உளுந்து மாவு, சோயா மாவு - தலா 1/4 கப், பொடியாக நறுக்கிய வெங்காயம், முட்டைக்கோஸ், கேரட், குடமிளகாய் - தலா 1, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, பச்சைமிளகாய் விழுது - 2 டீஸ்பூன், ஃப்ரூட் சால்ட் - 1 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை: அரிவு மாவு, உளுந்து மாவு, சோயா மாவு, ஃப்ரூட் சால்ட், காய்கறிகள், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, தண்ணீர் சேர்த்து தோசை மாவுப் பதத்தில் கரைக்க வேண்டும். ஃப்ரூட் சால்ட் சேர்ப்பதால், மாவைப் புளிக்கவைக்கத் தேவை இல்லை. தோசைக்கல்லில், இந்த மாவை சிறிய ஊத்தாப்பம்போல விட்டு சுட்டு எடுக்கவும். தேங்காய் சட்னியுடன் சேர்த்துச் சாப்பிட சுவையாக இருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்