விரல்கள் செய்யும் விந்தை

சக்தி முத்திரை

பெயருக்கு ஏற்றதுபோல உடலுக்கு சக்தி தரும் முத்திரை இது. ‘உடலுக்கு சக்தி வேண்டும்’ என்று, கடைகளில் விற்கும் பானங்கள் பலவற்றையும் பருகுகிறோம். ஆரோக்கியமான உணவுமுறையைப் பின்பற்றினாலே, போதிய சக்தி கிடைத்துவிடும். கூடுதலாக, எந்தச் செயற்கையான பானங்களும் தேவை இல்லை. ஆரோக்கியமான உணவுகளை உண்டு, சக்தி முத்திரையையும் செய்துவந்தால், நல வாழ்வு நம் வசம்!

எப்படிச் செய்வது?

கட்டை விரலை மடக்கி, நடுவிரலின் அடியில் வைத்து, நடுவிரல் மற்றும் ஆள்காட்டி விரலால் கட்டை விரலைச் சுற்றிப் பிடிக்க வேண்டும். மோதிர விரல் மற்றும் சுண்டு விரல் நீட்டி இருக்க வேண்டும். பின்னர், இரண்டு கைகளும் ஒன்றோடு ஒன்று ஒட்டுமாறு வைக்க வேண்டும். சப்பளங்கால் இட்டு அமர்ந்தோ, கால் தரையில் ஊன்றி இருப்பது போன்ற நிலையிலோ நெஞ்சுக்கு நேராகக் கைகளை வைத்து, நீட்டியிருக்கும் விரல்கள் மேல்நோக்கி இருக்குமாறு செய்ய வேண்டும். 10 முதல் 20 நிமிடங்கள் வரை இந்த முத்திரையைச் செய்யலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்