கொசுவால் பரவும் கொடிய நோய்கள்

அலெர்ட் அப்டேட்

லகின் ஆபத்தான ஜீவராசி என்றால் சிங்கம், புலி என்று எண்ண வேண்டாம்...அது கொசுதான். உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களின் உயிரைக் குடித்துக்கொண்டிருக்கின்றன கொசுக்கள். ஆண்டு முழுதும் உலகின் ஏதாவது ஒரு பகுதி, கொசுக்களால் பேரழிவைச் சந்தித்துக்கொண்டே இருக்கிறது. கொசுக்களால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய விழிப்புஉணர்வை ஏற்படுத்த வேண்டும்; கொசுக்களை ஒழிக்க வேண்டும் என்பதை மையக் கருத்தாகக்கொண்டு, ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி ‘உலகக் கொசுக்கள் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது.  தமிழகத்தைப் பொறுத்தவரை ஆகஸ்ட் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில்தான் கொசுக்களால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். கொசுக்களில் பல வகைகள் இருக்கின்றன. அவற்றில், மலேரியாவுக்கு காரணமான ‘அனோபிலஸ்’ மற்றும் டெங்குவைப் பரப்பும் ‘ஏடிஸ் ஏஜிப்டி’ கொசு மிகவும் ஆபத்தானவை.

ஏடிஸ் ஏஜிப்டி குடும்பத்தைச் சேர்ந்த கொசுக்கள், அளவில் பெரிதாக இருக்கும். இவை, பகல் நேரங்களில் கடிக்கும். இந்தக் கொசுவால் டெங்கு, சிக்குன்குனியா, ஜிகா முதலான மோசமான வைரஸ் கிருமிகள் பரவுகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை, மலேரியாவும் டெங்குவும்தான் மக்களை ஆட்டிப்படைக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்