கஞ்சி கஷாயம் - நலம் தரும் தினம்

நோய்கால ரெசிப்பிகள் 32

முன்பு எல்லாம் உடல்நிலை சரியில்லை என்றால், நொய், கஞ்சி தயாரித்துத் தருவது, கஷாயம் செய்வது என வீட்டிலேயே கவனிப்பார்கள். ஆனால், தெருவுக்குத் தெரு மெடிக்கல் ஷாப் வந்த பிறகு, கஞ்சி வைப்பதும் மறந்துவிட்டது, கஷாயம் தயாரிப்பதும் மறந்துவிட்டது. சாதாரண காய்ச்சலுக்குக்கூட மருத்துவமனைக்கு ஓடுவது வழக்கமாகிவிட்டது. தலைவலி, வயிற்றுவலி என்றால் எதனால் இந்தப் பாதிப்பு ஏற்பட்டது என்பதைத் தெரிந்து, சுக்கு, மிளகு, இஞ்சி, கொத்தமல்லி என வீட்டிலேயே இருக்கும் சமையல் பொருட்களைக் கொண்டு எளியமுறையில் கஷாயம் தயாரிக்கலாம். இதனால், சட்டென்று பாதிப்பு மறைந்துவிடும். மேலும், நோயுற்றிருக்கும்போது உடலும் உள்ளமும் சோர்வாக இருக்கும். செரிமானம் மெதுவாகவே நடக்கும். கஞ்சி போன்ற நீராகாரங்கள் பருகுவதன் மூலம், உடலுக்குத் தேவையான ஆற்றலைப் பெறலாம்.  நோயுற்ற காலத்தில் நாம் பருகும் கஞ்சிகள் மற்றும் கஷாயங்களைப் பட்டியலிட்டு அவற்றின் பலன்களைச் சொல்கிறார் சித்தமருத்துவர் சண்முகப்பிரியா. அதை செய்துகாட்டியுள்ளார் சமையல்கலை நிபுணர் எஸ்.ராஜகுமாரி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்