ஸ்வீட் எஸ்கேப் - 17

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சர்க்கரையை வெல்லலாம்

ர்க்கரை நோய்க்கும் பல், ஈறு பிரச்னைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆனால், சர்க்கரை நோயாளிகளில் பெரும்பாலானவர்களுக்குக்கூட இது தெரியாது. சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லாமல் செல்லும்போது, வாய் தொடர்பான பிரச்னைகள்... குறிப்பாக, ஈறு தொடர்பான பிரச்னைகள் தலைதூக்கும். இரண்டுவிதங்களில் இது சர்க்கரை நோயாளிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.

முதலில், சர்க்கரை அளவு ரத்தத்தில் மட்டும் அல்ல... எச்சிலிலும் அதிகரிக்கிறது. இது, கிருமிகளுக்குக் கொண்டாட்டமான விஷயம். அவற்றுக்குத் தேவையான உணவு கிடைத்துவிடுவதால், கிருமிகள் அபரிமிதமாகப் பெருகுகின்றன.

இரண்டாவதாக, கிருமிகளை எதிர்த்துப் போராடும் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு குறைந்துவிடுகிறது. இதனால், பாக்டீரியா உள்ளிட்ட கிருமிகள் ஈறுகளைப் பாதிக்கின்றன. அதோடு, ஈறு பிரச்னை உடனடியாகச் சரியாவதும் இல்லை. இதனால்தான், பல் மருத்துவர்கள் கூட்டமைப்பு, சர்க்கரை நோயையும், பல்-ஈறு நோய்களையும் `இருவழிப்பாதை’ என வர்ணிக்கின்றன. அதாவது, சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டும் ஈறு தொடர்பான பிரச்னை ஏற்படுகிறது என்பது இல்லை. மிக மோசமான ஈறு பிரச்னைகூட, ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பதைப் பாதித்து, சர்க்கரை நோய்க்குக் காரணமாகிவிடும்.

ஈறு நோய்கள்

ஆரம்பத்தில் எந்த அறிகுறியையும் வெளிப்படுத்தாது. ஈறு பாதிப்படைந்த நிலையில்தான் பிரச்னையை நாம் உணர்வோம். அதனால்தான், `குறிப்பிட்ட கால இடைவெளியில் பல் மருத்துவரை அணுகி, ஈறுகளைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்’ என்று சர்க்கரை நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கிறோம்.

ஈறு பாதிக்கப்பட்டதும் ஈறு அழற்சி அல்லது வீக்கம் (Gingivitis) ஏற்படும். இதைப் புறக்கணித்தோம் என்றால், மிகத்தீவிர ஈறு நோய் ஏற்படும். இதை, `பெரியோடோன்டைடிஸ்’ (Periodontitis) என்போம். இந்த நிலையில், ஈறு அறுவைசிகிச்சை செய்வதன் மூலம் மட்டுமே பற்களைப் பாதுகாக்க முடியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்