உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 16

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

‘தலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்’ என்பார்கள். அந்த அளவுக்குத் தலைவலிதான் தலையாய வலி! தலைவலி வருவதற்குப் பல காரணங்கள் உண்டு. அதுவும், அனைவருக்குமே வேலைப்பளு அதிகம் உள்ள இந்தக் காலகட்டத்தில் கேட்க வேண்டுமா? டென்ஷன் காரணமாகவே பெரும்பாலானோருக்குத் தலைவலி வந்துவிடுகிறது. இந்த இதழில் தலைவலியைப் பற்றிப் பார்ப்போம்.

பலருக்கு எப்போதாவது ஒருமுறை தலைவலி வரும். சிலருக்கு வாரத்துக்கு இரண்டு, மூன்று நாட்கள் தலைவலி வருவது உண்டு. ஒருசிலருக்கு் சாதாரண தலைவலியாக இருக்கும். ஒரு காபி குடித்தாலே சரியாகிவிடும். சிலருக்கு மிகத் தீவிரமாக, வார்த்தையால் விவரிக்கவே முடியாத அளவுக்குக் கடுமையான தலைவலி ஏற்படலாம். என்றைக்காவது ஒருநாள் வரக்கூடிய தலைவலிதான் என்றால் கவலைப்படத் தேவை இல்லை. அடிக்கடி வந்தால், கட்டாயம் சிகிச்சை பெற வேண்டும். பலரும் அலட்சியமாக இருந்துவிட்டு, பிரச்னை முற்றிய நிலையில்தான் மருத்துவமனைக்கு வருகின்றனர்.

சரி, ‘மூளைக்குதான் வலி என்ற உணர்வே இல்லை என்று சொல்லியிருந்தீர்களே, பின்னர் எப்படி தலைவலி ஏற்படுகிறது?’ எனக் கேட்கலாம். வலி என்ற உணர்வு, மூளையில் உணரக்கூடியது. மூளைக்கு அடியில் இருக்கும் டிரை ஜெமினல் நியூரான்கள்தான் வலியை மூளைக்குத் தெரியப்படுத்துகின்றன. அதன்பிறகுதான் வலி உணரப்படும். மூளைக்குள் என்ன செய்தாலும் வலியை உணராத மூளை, தன்னைச் சுற்றி இருக்கும் உறை, தசைகள், சைனஸ் அறை, கண், காது, இந்தப் பகுதிகளில் உள்ள நரம்புகள், ரத்தக்குழாய்கள் என எதில் பிரச்னை ஏற்பட்டாலும் வலியை உணர்வது இதனால்தான்.

இந்த வலி, மெல்லியதாக குத்துவதுபோன்று மிதமானதாக விட்டுவிட்டு வரக்கூடியதாக இருக்கலாம். தலைவலி ஏற்பட  நூற்றுக்கணக்கான காரணங்கள் இருக்கின்றன. இதனால்தான், தலைவலி என்று வரக்கூடிய அனைவருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை அளிப்பது இல்லை. ஏன், எதனால், எங்கே எனக் கண்டறிந்து, அதற்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்