இனி எல்லாம் சுகமே - 17

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
செரிமானம் அறிவோம்!

நாம் உட்கொள்ளும் உணவு, உணவுக்குழாய் வழியாக இரைப்பைக்குச் சென்று, கூழாக்கப்பட்டு, வெளியே தள்ளப்படுவதற்கு சராசரியாக மூன்று மணி நேரம் ஆகிறது. இரைப்பையில் வெளிவரும் உணவு சிறுகுடலில் விழுகிறது. அங்கே, கணைய நீர் மற்றும் பித்த நீரால் சத்துக்கள் பிரிக்கப்பட்டு, உறிஞ்சப்பட்டு, கடைசியில் கழிவாக பெருங்குடலை  அடைய, மேலும் மூன்று மணி நேரம் ஆகிறது.

பெருங்குடல் ஒரு கழிவுத் தொழிற்சாலை எனச் சொல்லலாம். திரவக்கழிவுகளில் எஞ்சியிருக்கும் உப்புகள், நீர் போன்றவை இங்கே உறிஞ்சப்பட்டு திடக்கழிவாக மாற்றப்படுகிறது. திடக்கழிவு ஒன்று சேர்ந்து, மலக்குடல் வழியாக வெளியேறுகின்றன. பெருங்குடலில் நடக்கும் இந்தப் பயணத்துக்கு 36 மணி நேரம் தேவைப்படுகிறது. நாம் சாப்பிடும் உணவு மலமாக வெளியே வர, சராசரியாக 42 மணி நேரம் தேவை. பெருங்குடல் ஆரோக்கியமாக இல்லை என்றாலோ, ஏதாவது ஒரு பகுதி ஸ்ட்ரைக் செய்தாலோ, உணவு ஒழுங்காகச் செரிக்கப்படாமல், வயிற்றுப்போக்காக வெளியேறும்; அல்லது, மலச்சிக்கல் ஏற்படும்.

நாம் உட்கொண்ட உணவு ஒழுங்காகச் செரிக்கப்பட்டு, சரியான நேரத்தில் கழிவாக வெளியேறாமல்போனால், நமது உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்படும். அந்த வகையில் பெருங்குடல் முக்கியத்துவம் வாய்ந்த பல வேலைகளைச் செய்கிறது. பெருங்குடல், சுமார் ஐந்து அடி  நீளம் கொண்டது. உணவு, புவியீர்ப்பு விசைக்கு எதிராக மேலே ஏறி, கீழே இறங்கும் வித்தியாசமான பயணம் இங்கு நடக்கிறது. சிறுகுடலைவிட நீளத்தில் குறைவாக இருந்தாலும், அகலத்தில் பெரியது என்பதாலேயே பெருங்குடல் எனப்படுகிறது.

பெருங்குடல்வாய் (Cecum), குடல்வால் (Appendix), ஏறுமுகக் குடல் (Ascending Colon), ஹெபாடிக் வளைவு (Hepatic Flexure), குறுகிய குடல் (Transverse Colon), மண்ணீரல் வளைவு (Splenic Flexure), இறங்குமுகக் குடல் (Descending Colon), நெளிவுக்குடல் (Sigmoid Colon), மலக்குடல் (Rectum), ஆசன வாய் (Anus) என, பெருங்குடலை 10 பாகங்களாகப் பிரிக்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்