மருந்தில்லா மருத்துவம் - 17

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
கழுத்து வலி

நான்கு, ஐந்து கிலோ எடை உள்ள தலையைத் தாங்கிப்பிடிக்கும், தலையையும் மார்பையும் இணைக்கும் சிறிய அமைப்பான கழுத்துக்கு அதிகப்படியான வேலை கொடுக்கும்போது கழுத்து வலி ஏற்படுகிறது. ஏழு எலும்புகள் கொண்ட உறுப்பு கழுத்து. முதல் இரண்டு சி1, சி2 (அட்லாஸ், ஆக்ஸிஸ்) எனும் எலும்புகள் தலையைத் தாங்குவதோடு, தலை மேலும் கீழும் அசைவதற்கும், பக்கவாட்டில் அசைவதற்கும் உதவுகின்றன. இந்த ஏழு எலும்புகள் உராயாமலும், தேய்ந்துபோகாமலும் இருக்க, இவற்றுக்கு இடையே குருத்தெலும்புகள் உள்ளன.

மூளையுடன் தொடர்புடைய தண்டுவடம், கழுத்துப் பகுதியில் தொடங்குகிறது. இது, கழுத்து எலும்புகளுக்குப் பாதுகாப்பாக உள்ளது. தண்டுவடத்தில் இருந்து வெளிப்படும் நரம்புகள், கழுத்துப் பகுதியில் உள்ள தசைகளுக்கும், இரண்டு கைகளுக்கும் உணர்ச்சியூட்டுகின்றன. கழுத்து எலும்புகளின் இரு பகுதிகளிலும் வலுவான தசைகள் உள்ளன. இவற்றுக்கு இடையே நரம்புகளும் ரத்தக்குழாய்களும் ஊடுருவுகின்றன. இத்தகைய வலுவான கழுத்தை நம்முடைய அன்றாட செயல்கள் பாதிப்படையச் செய்கின்றன.

கழுத்து வலி என்பது, கழுத்துப் பகுதியைச் சார்ந்த நோயின் அறிகுறியே! இதற்கு பல காரணங்கள், வெவ்வேறு அறிகுறிகள் உள்ளன.

நீண்ட நேரம் கணினியில் வேலை செய்வது, அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பது, பாரமான பொருளைத் தூக்குவது, கனமான பள்ளிப் பைகளைச் சுமப்பது, மன அழுத்தம் போன்றவற்றால் கழுத்துவலி ஏற்படலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்