ஸ்டார் ஃபிட்னெஸ்

சிந்து சீக்ரெட்!

ந்த ஒலிம்பிக்கில், 100 கோடி இந்தியர்களின் மனதையும் சுருட்டி வெள்ளிப் பதக்கமாக மாட்டிக் கொண்டார் பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து. உடல் எடை குறைய நினைப்பவர்களின் முதன்மையான சாய்ஸ் பேட்மின்டன் விளையாட்டுதான். அதில்தான் அதிக கலோரிகள் கரையும். அந்த விளையாட்டையே புரொஃபஷனலாகக் கொண்டவர்களுக்கு எப்படிப்பட்ட ஃபிட்னெஸ் அவசியம்? என்ன என்ன செய்கிறார் சிந்து?

*சிந்துவின் உயரம் 5.11. அவரது லோயர் பாடி (இடுப்புக்குக் கீழ்ப் பகுதிகள்) அவ்வளவு வலிமையாக முன்பு இல்லை. அதை கண்டறிந்து அவரது கோச்சும், உடற்பயிற்சி ஆலோசகரும் அந்தத் தசைகளை வலுவாக்க சிறப்புப் பயிற்சிகள் அளித்தார்கள். ஆரோக்கியம் என்பது உடல் முழுவதும் சீராக இருக்க வேண்டும். பைசெப்ஸ், ஆர்ம்ஸ் என குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் வலுவாக்கக்கூடாது.

*ஒருமுறை, சிந்துவுக்குக் காலில் அடிப்பட்டுவிட்டது. நல்ல வலி. வீல் சேரிலேதான் நகர்ந்தார். ஆனால், பயிற்சியாளர்  அவரை விடாமல் வீல் சேரோடு விளையாட்டுக்களத்துக்கு அழைத்து வந்தார். எதிர்ப்புறம் இருந்து பந்தை அவர் த்ரோ செய்ய, வீல் சேரில் இருந்தபடியே விளையாடினார் சிந்து. ‘வெற்றிக்குத் திறமையோடு சேர்ந்த உழைப்பும், விடாமுயற்சியும் தேவை’ என்கிறார் சிந்து. இது ஃபிட்னெஸுக்கும் பொருந்தும்.

*பெரும்பாலான விளையாட்டு வீரர்களைப் போல சிந்துவுக்கும் யோகாவும், நீச்சலும் இரண்டு முக்கிய ஸ்ட்ரெஸ் பஸ்டர்ஸ். இந்த இரண்டோடு தூக்கத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். பெரும்பாலும் அதிகாலை நேரத்தில் பயிற்சி மேற்கொள்வதால், சரியான தூக்கம் சிந்துவுக்கு அவசியம். ஃபிட்னெஸ் என்பது நம்ம லைஃப்ஸ்டைல் போன்றது என்பதுதான் சிந்து சொல்லாமல் சொல்லும் விஷயம்.

*முட்டை, பால், பிரெட், கொஞ்சம் இறைச்சி ஆகியவை சிந்துவின் தினசரி டயட்டில் இருக்கும் விஷயங்கள். ஜங்க் ஃபுட் அறவே கிடையாது. ‘நீங்கள் ஒரு விளையாட்டு வீரர் ஆக வேண்டுமென்றால் சாப்பாட்டை கவனிப்பது அவசியம்’ என்கிறார் சிந்து. அது, ஆரோக்கியத்தை விரும்பும் எல்லோருக்குமான அறிவுரையாக ஏற்றுக்கொள்ளலாம்.

*“எல்லாவற்றுக்கும் ஒரு இலக்கு (கோல்) அவசியம். எனக்கு ஒலிம்பிக்கில் பதக்கம்” என சொல்லியிருக்கிறார் சிந்து. அந்த இலக்குதான் நம்மை ஓட வைக்கும். ஃபிட்னெஸிலும் அப்படி ஓர் இலக்கு வைத்துக் கொண்டால், வெற்றி நிச்சயம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்