ஆதாரம் என்றும் நீர்தானே!

'உலகில் 10ல் ஒருவருக்கு சுத்தமான தண்ணீர் கிடைப்பதில்லை’ என்கிறது உலக சுகாதார நிறுவனம். அதாவது, 66 கோடியே 30 லட்சம் பேருக்கு! இன்று நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்னைகளில் தண்ணீருக்குதான் முதல் இடம். தொழில்நுட்பம் அதிநவீனமாகிவிட்ட இன்றைய காலகட்டத்திலும் மூன்றில் ஒரு பள்ளிக்கூடத்தில் கூட சுத்தமான நீரும் கழிவறை வசதியும் இல்லை. தண்ணீரை தங்கத்தைப்போல கையாளவேண்டிய நிர்பந்தத்தில் நாம் இருக்கிறோம். பாலுக்கு நிகராக தண்ணீரையும் விலை கொடுத்து வாங்க ஆரம்பித்திருக்கிறோம்.

நம் உடலுக்கு மிகவும் அத்தியாவசியமானவை உணவும் தண்ணீரும். உணவு இல்லாமல் ஒரு மனிதன் ஐந்து நாட்கள் வரை வாழலாம். ஆனால், தண்ணீர் இல்லாமல் ஒரு நாள்கூட வாழ முடியாது. விரதம் இருப்பவர்கள்கூட சாப்பிட மாட்டார்களே தவிர, நீர் அருந்துவார்கள். நம் உடலில் 70 சதவிகிதம் தண்ணீர் இருக்கிறது. ஒருவரின் உடல் எடையில் 70 சதவிகிதம் தண்ணீர்தான். 

தண்ணீர், உடல் இயக்கம் சீராக இருக்க உதவுகிறது; உடலின் தட்பவெப்ப நிலையைப் பராமரிக்கிறது. நாம் ஒவ்வொருவரும் உடலுக்குத் தேவையான தண்ணீரை எப்படிப் பயன்படுத்துகிறோம், அதாவது, எவ்வளவு அருந்துகிறோம், எவ்வளவு வெளியேற்றுகிறோம் என்பது மிக முக்கியமானது.  

ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு குறைந்தது 1,500 மி.லி நீர் அருந்த வேண்டும். நாம் சாப்பிடும் உணவில் இருந்து (சாம்பார், ரசம், மோர்) நீராக 1,000 மி.லி எடுத்துக்கொள்ள வேண்டும். செரிமான மண்டலம் உணவைச் செரித்து கொழுப்புச்சத்து, இரும்புச்சத்து எனப் பிரித்துக் கொடுக்கும்போது, (கார்போஹைட்ரேட் மெட்டபாலிசம்) கொஞ்சம் தண்ணீர் (சுமார் 300 மி.லி.) வெளியேறி, உடலுக்குக் கிடைக்கும். ஆக, மொத்தமாக நம் உடலுக்கு 2,800 மி.லி தண்ணீர் அவசியத் தேவை. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்