40 + நாற்பதைத் தொட்டவரா நீங்கள்?

திருமணம் ஆகி, மனைவி, குழந்தை என்று செட்டில்ஆகி... பிள்ளைகள் பள்ளி, கல்லூரியில் படிக்கும் நேரத்தில் குடும்பத் தலைவனை இழப்பது என்பது மிகவும் வேதனைக்குரியது. அதுவும், அந்த குடும்பத் தலைவனின் வருவாயை மட்டுமே நம்பி வாழும் குடும்பம் எனில் அவர்கள் நிலை இன்னும் படுமோசமாகிவிடுகிறது.

மன அழுத்தம், தவறான உணவு பழக்கம், உடற்பயிற்சியின்மை உள்ளிட்ட தவறான வாழ்க்கைமுறை காரணமாக, இளம் வயதிலேயே மாரடைப்பு உள்ளிட்ட இதயநோய்கள், சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் தலைதூக்குகின்றன. அதனுடன், மது, சிகரெட் பழக்கம் சேரும்போது நுரையீரல் புற்றுநோய், கல்லீரல் செயல்இழப்பு என்று வேறுவகையான பிரச்னைகள் வருகின்றன. எனவே, நாம் சார்ந்திருக்கும் சூழலைப் புரிந்துகொண்டு, நம் உடல்நலத்தை அவ்வப்போது சுயபரிசோதனை செய்துகொள்வது அத்தியாவசியமானது. அப்படி, 40 வயதைக் கடந்த ஆண்கள் கட்டாயம் செய்து கொள்ளவேண்டிய மருத்துவப் பரிசோதனைகள் என்னென்ன?

கொலஸ்ட்ரால்


கொலஸ்ட்ரால் பரிசோதனை இதய நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான வழி. ஒவ்வொருவரும், குறைந்தது ஐந்து வருடங்களுக்கு ஒரு முறையாவது கொலஸ்ட்ரால் அளவை பரிசோதனை செய்துகொள்வது நலம். அதிலும் 40 வயதை ஒருவர் எட்டிவிட்டால், நிச்சயம் அவ்வப்போது கொலஸ்ட்ரால் பரிசோதனை செய்துகொள்ளவேண்டும். அதிக கொலஸ்ட்ரால் நிலை உள்ளவர்கள் மற்றும் டயாபடீஸ், இதயநோய், சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள் அடிக்கடி இந்த கொலஸ்ட்ரால் சோதனையைச் செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்