வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ்

பிகாம்ப்ளெக்ஸ் நீரில் கரையக்கூடிய வைட்டமின். இதில் உள்ள முக்கியமான எட்டு வைட்டமின்கள் நம்முடைய உடலின் செயல்பாட்டில் முக்கியப் பங்குவகிக்கின்றன.  உணவை உடலுக்குத் தேவையான எரிபொருளாக மாற்ற, நாள் முழுக்க நாம் ஆற்றல் மிக்கவர்களாக இருக்க, செல்களின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு பி காம்ப்ளெக்ஸ் மிகவும் அவசியம்.

பி1 உணவுத் தேவை உணர்வை, ஒழுங்குபடுத்துகிறது. ஆற்றல் அளிக்கிறது.

பி2 ஆரோக்கியமான பார்வை, சருமத்துக்கு உதவுகிறது. ரத்தச் சிவப்பணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறது.

பி3 ஆரோக்கியமான சருமம் மற்றும் தசை திசுக்களுக்கு அவசியம். மூளை செயல்திறனை மேம்படுத்துகிறது.

பி5 உணவு மெட்டபாலிஸத்துக்கு உதவுகிறது. நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துகிறது.

பி6 மூளையில் செரட்டோனின் என்ற ரசாயனம் சுரக்க உதவுகிறது.

பி7 ஆரோக்கியமான முடி, நகம் வளர்ச்சிக்கும், சரும ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.

பி9 ரத்தச் சிவப்பணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறது. கர்ப்பக் காலத்தில் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

பி12
உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கச்செய்கிறது. மனதின் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது.

- பா.பிரவீன்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick