கைகளை துரத்தும் புதிய ஆபத்து!

உஷார் ‘செல்ஃபி எல்போ’

ஸ்ருதிக்கு 18 வயதாகிறது. முதலாம் ஆண்டு கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பவர். நண்பர்கள் பட்டாளத்துடன் சேர்ந்தால் எப்போது பார்த்தாலும் செல்ஃபிக்களும் பீட்ஸாக்களும்தான். முகத்தை அஷ்டக் கோணலாக்கி, உதட்டைக் குவித்து என ஸ்ருதியின் செல்போன் முழுவதையும் அடைத்துக்கொண்டிருப்பது செல்ஃபிக்களே!

ஒருநாள் காலை, விழித்தபோது ஸ்ருதியால் வலதுகையை அசைக்கவே முடியவில்லை. பயந்துபோன ஸ்ருதியின் பெற்றோர், அவரை என்னிடம் அழைத்து வந்தனர். ஸ்ருதியின் கைகளைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு, “டென்னிஸ் விளையாடுவீங்களா?” என்று கேட்டேன். “இல்லை” என்றார். “செல்ஃபி எடுப்பீங்களா?” என்று கேட்டேன். அவர் “ஆமாம்” என்றார். “உங்கள் பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்குப் பெயர், ‘செல்ஃபி எல்போ’” என்று சொல்லவும் பயந்தேவிட்டனர் ஸ்ருதியின் பெற்றோர். ஒருவழியாக செல்போனை பிடுங்கிவைத்து, உடற்பயிற்சிகளின் மூலமாக ஸ்ருதியின் கைகளின் வலி குறைக்கப்பட்டது.

தினசரி சாலையில் நடந்துபோகும் போதோ, ஒரு விழாவின்போதே ஸ்கூட்டி மீது சாய்ந்துகொண்டு டிராஃபிக் சிக்னல் கேப்பில் கையை செல்போனுடன் உயர்த்திப் பிடித்து செல்ஃபி எடுப்பவர்களையும், விழாவில் எல்லாரும் மேடையைப் பார்த்துக் கொண்டிருக்க நான்கு பேர் மட்டும் தனியாக செல்போனில் செல்ஃபி எடுப்பதையும் நாம் இப்போதெல்லாம் அடிக்கடி பார்க்க முடிகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்