வலியை நீக்கும் ட்ரிகர் பாயின்ட் தெரப்பி

குழந்தைகள் விளையாடும்போது தடுக்கி விழுந்து அதனால் ஏற்படும் வலியோ, பெரிய எடையைத் தூக்கியதால் உண்டான தசைப்பிடிப்போ, விபத்துகளுக்குப் பிறகு வரும் பிரச்னையோ... எதுவாக இருந்தாலும் இருக்கவே இருக்கிறது ட்ரிகர் பாயின்ட் தெரப்பி. தசைகளில் ஏற்படும் அதிகப்படியான அழுத்தம், இறுக்கம் காரணமாக வலி ஏற்படுகிறது. மென்மையாக அழுத்தம் கொடுத்து, வலியை நீக்கும் நுட்பம்தான் ட்ரிகர் பாயின்ட். இதில், முதலில் வலி முடிச்சுகளைக் கண்டுபிடித்து, அதற்குத் தக்க அழுத்தங்கள் தரப்படும். பின்னர், அந்தத் தசைகளுக்கு ஸ்ட்ரெச் கொடுக்கப்படும். தொடர்ந்து செய்யும் பயிற்சிகளால், தசை வலுபெறும். வலியும் நீங்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்