படர்தாமரையிலிருந்து தப்பிக்க சிறந்த வழிகள்

ருமப் பிரச்னைகளில் முதன்மையானது படர்தாமரை (Ringworm). இது குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் வரக்கூடியது. உடலில் எங்கு வேண்டுமானலும்  வரக்கூடியது என்றாலும் பெரும்பாலும், உடலின் மறைவான பகுதிகளில் வந்து, வெளியே சொல்லவும் முடியாமல், சரியான சிகிச்சையும் எடுக்க முடியாமல் வாட்டி வதைக்கும்.

படர்தாமரை தோன்றுவதற்கான காரணம்

சருமத்தின் மேல்பகுதியில், கெராட்டின் (keratin) என்னும் புரதம் உள்ளது. இதனை டெர்மேட்டோபைட் என்கிற பூஞ்சை பாதிக்கும். இது, தலையின் அடிப்பகுதியான ஸ்கால்ப் (scalp), கை மற்றும் கால் நகங்கள், சருமம் ஆகியவற்றை பாதிக்கும். இந்த பூஞ்சை, மனிதர்கள் மற்றும் விலங்குகளின் தோல் தொடர்பு மூலமாகப் பரவும்.

படர்தாமரையின் ஆரம்ப அறிகுறிகள்

உடலில் சிவப்பு அல்லது கறுப்புத் தழும்பு தோன்றும். இவற்றின் ஓரங்கள், மேலே எழும்பிய நிலையில் இருக்கும். அவற்றில் தொடர் அரிப்பு மற்றும் எரிச்சல் இருக்கும். அரிப்பு ஏற்பட்ட இடத்தைச் சொறியும்போது சிறுசிறு கட்டிகள் தோன்றும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்