கூலா இருக்க குளுகுளு வழிகள்!

ஹெல்த்வெங்கடேஷ்வரன், ஆயுர்வேத மருத்துவர்

கோடை காலம் நெருங்குகிறது... சாலை ஓரங்களில் குவிந்துகிடக்கும் தர்பூசணிப் பழங்கள் நம்மை ஆறுதல்படுத்தினாலும், வெயிலால் ஏற்படக்கூடிய பிரச்னைகள் நம்மைப் பயமுறுத்தவே செய்கின்றன. இனி நம் வாழ்வியலை வெயிலுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். பலருக்கும் வரக்கூடிய பொதுவான பிரச்னையாக உடல் உஷ்ணம் இருக்கிறது. இதை எப்படிச் சமாளிப்பது?

உடலின் வெப்பநிலை சாதாரணமாக, 98.6 டிகிரி. இந்த வெப்பநிலை லேசாக மாறினால் பெரிய பிரச்னை இருக்காது. ஆனால், அதிகரித்தால் அதை உடல் உஷ்ணம் எனச் சொல்வர். இதற்குத் தூக்கமின்மை, நீர்ச்சத்துக் குறைபாடு, தவறான உணவுப் பழக்கம் போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick