தலைசுற்றும்... தடுமாறும்... கிறுகிறுக்கும்... - இது வெர்டிகோ

ஹெல்த்இலியாஸ் பாஷா, நரம்பியல் நிபுணர்

நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்திருக்கும் போது தலைசுற்றுவதுபோல் இருக்கும்; சிலர் மயங்கிக்கூட விழுந்துவிடுவார்கள். சிலருக்கு சினிமா தியேட்டரின் அதீத இரைச்சலில், தடதடத்து ஓடும் ரயில் சத்தத்தில், உயரமான இடத்தில் நிற்கும்போது இப்படி தலைசுற்றும். அது வெர்டிகோவாகவும் இருக்கலாம். நம் உடலின் முக்கிய உறுப்புகளாகிய கண், காது மற்றும் மூளை ஆகியவற்றில் ஏற்படும் குறைபாட்டால் வருவதுதான் `வெர்டிகோ' (Vertigo). 

வெர்டிகோ என்பதை கிறுகிறுப்பு என்றும் சொல்வார்கள். இந்தக் குறைபாடு ஏற்பட்டால், தலை பாரமாக இருப்பது போல் தோன்றுதல், தலைசுற்றுதல், மயக்கம், மனக்குழப்பம், பார்வை மங்குவது, உடம்பெல்லாம் ஊறுவது போன்ற அறிகுறிகள் தென்படும். சிலருக்குக் கண்ணில் எரிச்சல் ஏற்படலாம்; காது கேட்காமல் போகலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick