ஸ்வீட் எஸ்கேப் - 30

சர்க்கரையை வெல்லலாம்ஹெல்த்க.பரணீதரன், சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர்

ர்க்கரை நோய் சிகிச்சையில் புதிய முன்னேற்றங்கள்!

சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் நாம் செய்யும் தவறுகள், அதைச் சரிசெய்ய நாம் எடுக்கும் மாத்திரைகள், இன்சுலின் மருந்து எப்படிச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது என்பதைப் பற்றி எல்லாம் பார்த்தோம். இந்த இதழில், சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் சிகிச்சையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைப் பற்றிப் பார்ப்போம்.

சர்க்கரை நோயாளிகள், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க எடுக்கும் முயற்சிகளின்போது சந்திக்கும் மிக முக்கியப் பிரச்னை, `ஹைபோ கிளைசீமியா’  (Hypoglycemia) எனப்படும் தாழ் சர்க்கரை நிலை. இந்தப் பிரச்னை, நள்ளிரவு முதல் அதிகாலை நேரங்களில் அதிகம் ஏற்படுகிறது. சர்க்கரை அளவு இயல்பைவிட மிகவும் குறைந்துவிடுவதால், உயிரிழப்புக்கூட ஏற்படலாம். தற்போது, ரத்தச் சர்க்கரை ஏற்றத்தாழ்வைக் கண்டறிய, கண்காணிக்க ஏ.பி.ஜி எனப்படும் ஆம்புளேட்டரி குளூக்கோஸ் புரொஃபைல் (Ambulatory Glucose Profile) என்ற கருவி வந்திருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick