இயர்போன் உணர்த்தும் எச்சரிக்கை செய்தி! | Health Issues of using Headphones and Earphones - Doctor VIkatan | டாக்டர் விகடன்

இயர்போன் உணர்த்தும் எச்சரிக்கை செய்தி!

ஹெல்த்வேலுமணி காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவர்

ம் எல்லாப் பயணங்களிலும் உடன் வரும் தோழர், இயர்போன். வயதானவர்களுக்குக் கைத்தடி போல, இளம் தலைமுறையினருக்கு இயர்போன். கைத்தடி நடப்பதற்குப் பயன்பட்டது. ஆனால், இதுவோ பாட்டைக் கேட்கவும், மற்றவர் களுடன்  பேசவும் பயன்படுகிறது. இவ்வளவுதான் வித்தியாசம். இதைக் காதில் மாட்டிக்கொண்டே தூங்குவார்கள் சில இளசுகள். அவர்களின் காதிலிருந்து இயர்போனைக் கழற்றும் காட்சி நம் வீட்டிலேயே தினமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. பயணத்தில் இதன் துணையோடு ஜன்னல் ஓர சீட்டைத் தேடி அமர்ந்துவிட்டால் அந்தப் பயணமே சுகம்தான். பாட்டோ, பேச்சோ இரண்டுக்குமே கைகொடுக்கும் கருவி இது. ‘என்னோட இயர்போனைக் காணோம்’ என நாள் முழுக்கத் தேடிய அனுபவம் எத்தனையோ பேருக்கு இருந்திருக்கும். அவ்வளவு முக்கியமான இந்த இயர்போன், செல்போன் கதிர்வீச்சுகளிலிருந்து நம்மைப் பாதுகாத்தாலும், சில பாதிப்புகளையும் ஏற்படுத்தவே செய்கிறது. எப்போதும் இதை மாட்டிக்கொண்டு பாட்டுக் கேட்பது, செல்போனில் தொடர்ந்து பேசுவது போன்றவற்றால் வளரும் தலைமுறையினருக்குக் காது கேளாமைப் பிரச்னை அதிகரிப்பதாகச் சொல்கின்றன மருத்துவ ஆய்வுகள். எனில், இதற்கான தீர்வுதான் என்ன? பார்ப்போம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick